புதுச்சேரி நவ 23
வாலிபர் சங்க தலைவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காவல் துறை உதவி ஆய்வாளர் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி டி ஜி பி அலுவலக்ததை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த டிஓய்எப்ஜ முடிவு.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் சந்துரு அவரது சகோதரர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராரில் போக்கு வரத்துத்துறை உதவி ஆய்வாளர் சண்முகம் தனது வாக்கிடாக்கியால் சந்துருவின் சகோதாரர் சரவணனை தலையில் தாக்கியுள்ளார். தாக்கி உதவி ஆய்வாளர் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்ய கோரி காவல்நிலையம் சென்ற சந்துரு சகோதரர்கள் சரவணன், சசிக்குமார் ஆகியோரை 20க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்தும் தாக்கிய உதவி ஆய்வாளர் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யக்கோரியும் சந்துரு மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற கோரி வாலிபர் சங்கமும், இந்திய மாணவர்சங்கம் சார்பில் காந்தி வீதியில் கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு டிஓய்எப்ஐ பிரதேச துணைதலைவர் சரவணன், மாணவர்சங்க தலைவர் அரிகரன் கூட்டாக தலைமை தாங்கினார்கள். சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், சிஐடியூ ஆட்டோ சங்க தலைவர் ராஜாங்கம், வாலிபர் சங்க மாநில இணை செயலாளர் லெனின், பிரதேச செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் அன்துவான், பார்வர்டு கட்சி செயலாளர் முத்து, ஆர்எஸ்பி கட்சி தலைவர் லெனின், விவசாய சங்க தலைவர் பத்மநாபன், மாணவர் சங்க செயலர் ஆனந்து ஆகியோர் கண்ட உரையாற்றினார்கள். போராட்டத்தில் பேசிய வாலிபர் சங்க தலைவர்கள் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல்துறை டிஜிபி அலுவலகத்தை முற்றுகையீட்டு போராட்டம் நடத்துவோம் என்று பேசினார்கள்.