புதுச்சேரி மே 11
அரசு மருத்துவக்கல்லுhரியின் அங்கீகாரம் ராத்தானதை கண்டித்து மாணவர்,வாலிபர் சங்கங்கள் சார்பில் கல்வி பிச்சை எடுக்கும் போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
கதிர்காமம் இந்திராகந்தி அரசு மருத்துவகல்லுhரியில் போதுமான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தாததால் அகில இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்கைக்கான அங்கீகாரத்தை ரத்தசெய்தததை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும். இந்தாண்டே மாணவர் சேர்கை நடத்த வேண்டும்.தோடர்ந்து தனியார் மருத்துவகல்லுhரிகளுக்கு ஆதரவாக செயல்படும் புதுச்சேரி காங்கிரஸ் அரசை கண்டித்து இந்நுhதன போராட்டம் நடைபெற்றது.
காமராஜர் சிலை எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,வாலிபர் சங்கத்தின் தலைவர் சந்துரு ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.டிஒய்எப்ஐ செயலாளர் தமிழ்ச்செல்வன்,பொருளாளர் பிரபுராஜ்,நகர தலைவர் சரவணன்,மற்றும் நிர்வாகிகள் அரிதாஸ்,பாஸ்கர்,ராஞ்சித்,பார்த்தசாரதி ஆகியோர் பேசினார்கள்.திரளான மாணவர்கள்,வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக பொது மக்களிடம் இருந்து பிச்சை எடுத்த பணத்தை சுகாதாரத்துறை இயக்குநருக்கு டிடி எடுத்து அனுப்படும் என்று சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்தனர்.