Saturday, May 19, 2012

புதுச்சேரி,மே-15
தகுதி தேர்வுக்கான தேர்வு ரத்து செய்து வெளிப்படை தன்மையுடன் ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிபணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.இதற்கு மாறாக புதுச்சேரி அரசு தமிழகத்தை போல தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்பதற்காக திடீர் என்று தமிழக அரசிடம் அனுமதி பெற்று குறுகிய காலஅவகாசம் உள்ள நிலையில் இத்தேர்வு எழுத வேண்டும் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அறிவிப்பு வெளியிட்ட தினத்தில இருந்து நான்கு நாட்களுக்குள்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரவேண்டும் என்பது பல்வேறு குழப்பங்பகளை ஏற்படுத்தும்.
மேலும் ஜுன்-3 ஆம் தேதி  தேர்வு நடைபெறுவது  குறுகிய இடைவேளியில் இத்தேர்வு நடத்துவது படித்த இளைஞர்கiள் ஏமாற்றகூடியது.
இரண்டான்டு பட்டய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஓராண்டு பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு பணிக்காக காத்து இருக்கும் ஆசிரியர்களுக்கு மறுபடியும் ஓர் ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தேவைதானா?அப்படியே அரசின் போக்கு சரி என்று கூறினாலும் ஏன் புதுச்சேரி அரசு தனி ஒரு தேர்வணையம் ஏற்படுத்தகூடாது? எனவே நடைபெற உள்ள தகுதி தேர்வினை ரத்து செய்து வெளிப்படைத்தன்மையுடன் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்திகிறது.இவ்வாறு பிரதேச செயலாளர் ப.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுச்சேரி,மே-13
அரசு காலிபணியிடங்களில் ஒப்பந்த முறையில் பணி நியமணம் செய்வதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று டிஒய்எப்ஐ புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்த்தின் புதுச்சேரி பிரதேச சிறப்பு பேரவை கூட்டம் லா°பேட்டை ஜவஹர் பவனில் நடைபெற்றது.இப்பேரவைக்கூட்டத்திற்கு சங்கத்தின் பிரதேச தலைவர் கே.சந்துரு தலைமை தாங்கினார்.பேரவைகூட்டத்தை டிஒய்எப்ஐ தமிழ் மாநில இணைசெயலாளர் எ°.லெனின் துவக்கிவைத்து பேசினார்.டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்செல்வன்,பொருளாளர் பிரபுராஜ்,உழவர்கரை கமிட்டி தலைவர் பா°கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட திரளான வாலிபர்கள் பங்கேற்ற பேரவை கூட்டத்தில்  சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன் முடித்து வைத்து பேசினார். புதிய நிர்வாகிகள் இப்பேரவை கூட்டத்தில் புதுச்சேரி  பிரதேச   தலைவராக கே.சந்துரு,செயலாளராக பா.சரவணன்,பொருளாளராக இரா.சரவணன்,உள்ளிட்ட 23பேர் கோண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் இப்பேரவையில் நிறைவேற்றபட்ட தீர்மாணங்கள் வருமாறு,தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்திட தமிழகத்தை போல் கல்வி நிர்ணய குழுவை புதுச்சேரியில் அமைக்க வேண்டும்.புதுச்சேரி அரசுதுறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தமுறையில் நிரப்புவதை கைவிட்டு, நிரந்த ஊழியர்களாக  நிரப்ப  வேண்டும்.அரசு அறிவித்த வேலையில்லா கால நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

Wednesday, May 9, 2012

புதுச்சேரி,மே-8
தோழர்.விபி சிந்தன் நினைவுதினத்தை முன்னிட்டு வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் இலவச மோர் பந்தல் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.
புதுச்சேரி முத்து மாரியம்மன் கோவில் வீதி,காந்திவீதி சந்திப்பில் நடந்த இந்நிகழ்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரகமிட்டி தலைவர் அழகர்ராஜ் தலைமை தாங்கினார்.நகரகமிட்டி பொருளாளர் விஜிய் முன்னிலை வகித்தார்.இலவச மோர் பந்தலை டிஒய்எப்ஐ பிரதேச துணை தலைவர் சரவணன் துவக்கிவைத்தார்.பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,சிஐடியு மாவட்ட துணை தலைவர் ராஜாங்கம்,வாலிபர் சங்க நிர்வாகிகள் அன்துவான் உள்ளிட்ட திரளானோர்  கலந்து கொண்டனர்.