இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர்
சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ரெயில்
கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் ரெயில் மறியல்
நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதற்காக இன்று அவர்கள் தூய இருதய ஆண்டவர் கோவில் அருகே ஒன்று கூடினர்.
அங்கிருந்து ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு வாலிபர் சங்க தலைவர் சரவணன், மாணவர் சங்க தலைவர் அருண்குமார், மாதர் சங்க தலைவி தெய்வானை ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க மாநில செயலாளர்கள் சரவணன், ஆனந்த், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் ரஞ்சித், தமிழ்செல்வன், தட்சிணாமூர்த்தி, சுமதி, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊர்வலமாக வந்த அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் வந்து சென்னையிலிருந்து புதுவைக்கு வந்த ரெயிலின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி கட்சிக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.