புதுச்சேரி,ஜீன்.27-
கள்ளசாராயத்தை
எதிர்த்து போராடி உயிர்நீத்த கடலூர் தியாகிகள் குமார் – ஆனந்தன் ஆகியோரது 16 ஆம் ஆண்டு
நினைவு தினம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரியில்
அதிகரித்து வரும் கொலை,கொள்ளைகளுக்கு மூலகாரணமாக விளங்கும் போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும்,
ஆட்சியாளர்கள் இதனை கட்டுபடுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்ககோரி இந்திய ஜனநாயக வாலிபர்
சங்கம் சார்பில் புதுச்சேரி முழுவதும் மூன்று மாத காலங்களுக்கு பொதைக்கு எதிராக ஊரைக்கூட்டுவோம்
என்ற பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.
துவக்க நிகழ்ச்சி
போதைக்கு எதிரான பிரச்சாரம் இயக்கம் முத்தியால்பேட்டை
மணிகூண்டு எதிரில் சனிக்கிழமை துவங்கியது. இப்பிரச்சாரத் துவக்கநிகழ்ச்சிக்கு டிஒய்எப் நகரகமிட்டி துணைத்தலைவர் கே.நாகமுத்து தலைமை
தாங்கினார். போதைக்கு எதிராக நடைபெறும் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் பிரதேச தலைவர்
ஆர்.சரவணன், பொருளாளர் து.கதிரவன், துணைத்தலைவர் பாஸ்கர் ஆகியோர் வாலிபர் சங்கத்தின்
நோக்கத்தை விளக்கி பேசினார்கள். நகரகமிட்டி செயலாளர் அழகப்பன், நிர்வாகிகள் நவீன்,
தமிழ், விஐய், சபரி உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
போதைக்கு
எதிரான இப்பிரச்சாரம் தொடர்ந்து மூன்று மாதங்கள் புதுச்சேரி முழுவதும் நடைபெறுகிறது.