புதுச்சேரி,ஜன.22-
பாகூர்
குருவிநத்தத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர்
சங்கத்தின் குருவிநத்தம் கிளை தலைவர் செப்பரிதி தலைமை தாங்கினார்.முன்னதாக
நடத்தப்பட்ட 28வகையான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு வாலிபர்
சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,முன்னாள் பிரதேச
செயலாளர் த.தமிழ்ச்செல்வன்,கொம்யூன் தலைவர் அரிதாஸ் ஆகியோர் பரிசுகளை
வழங்கி பேசினார்கள்.இவ்விழாவில் வேர்களுக்கு விழுதுகள் வழங்கும் விழாவும்
நடைபெற்றது. வாலிபர் சங்க நிர்வாகிகள் நெல்சன், சுகதேவ், சுந்தரய்யா,அருள்ஜோதி,செல்வா உள்ளிட்ட திரளானோர்
பங்கேற்றனர்.
கரையாம்பத்துர்
கரையாம்பத்துரில்
நடைப்பெற்ற பரிசளிப்புவிழாவிற்கு கிளைத்தலைவர் உத்தரவேலு தலைமை
தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக டிஒய்எப்ஜ பிரதேச தலைவர்கள் கலந்து
கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார்கள்.
No comments:
Post a Comment