
புதுச்சேரி டிச 26
மத்திய காங்கிர° அரசும் கர்நாடக பாஜக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் இனைந்து ஊழலுக்கு எதிரான பிரச்சார இயக்கம் லா°பேட்டையில் நடைப்பெற்றது.
புதுச்சேரி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க வேண்டும். நாவலர் நெடுஞ்செழியன் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும். பள்ளி முதல்வரை நியமிக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்தும் இப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
ஐய்யனார் கோவில் எதிரில் நடந்த தெரு முனைப்பிரச்சாரத்திர்க்கு வாலிபர் சங்க நிர்வாகி பா°கர், மாணவர் சங்க இணை செயலாளர் ரஞ்சித் கூட்டாக தலைமைத் தாங்கினார்கள். சிபிஎம் உழவர் கரை கமிட்டி செயலாளர் லெனின்துரை, வாலிபர்சங்க பிரதேசத் தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,சாரதி ஆகியோர் பேசினார்கள். இப்பிரச்சாரத்தில் திரளான வாலிபர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.