Friday, December 24, 2010
நூதனப் போராட்டம்
புதுச்சேரி டிச 24
உயர்ந்துள்ள வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை வாங்குவதற்கு வங்கி மூலம் கடன் வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் நூதனப் போராட்டம் நடைப்பெற்றது.
வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களின் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் கண்டித்தும் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய , மாநில அரசுகளை கண்டித்தும், காய்கறிகளை வாங்க வங்கி மூலம் கடன் வழங்கக் கோரி மனுக்களுடன் போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி நேரு வீதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்பு நடந்த போராட்டத்திற்கு டிஒய்எப்ஐ நகர கமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், முன்னால் தலைவர் லெனின் துரை, நிர்வாகிகள் பா°கர், ஆனந்து மற்றும் நடைப்பாதை வியபாரிகள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வாலிபர் சங்க நிர்வாகிகள் வெங்காயம், கத்திரிக்காய், பீன்° உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு வங்கி மேலாளரை சந்தித்து கடன் கேட்டு மனு அளித்தனர். இந்த நூதன போராட்டம் பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.
படம் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment