
புதுச்சேரி தானே புயலில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். விவசாயிகள் விவசாய விளை நிலங்கள் சேதமடைந்துள்ளது. மீனவர்கள் முழுமையாக அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஏழைகள் குடிசைகளை இழந்துள்ளனர். மின்சாரம் முழுமையாக கிராமங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இயந்திரம் மிக மிக மெதுவாக நகர்கிறது, இது சரியல்ல. புதுச்சேரி அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் புதுச்சேரி மக்களை பாதுகாக்க தற்காலிகமாக தங்கும் இடம், இரவு நேரங்களில் மின்சாரம், சுத்தமான குடிநீர் வழங்கவும், உணவு ஏற்பாடு செய்யவும் அரசு இயந்திரங்களை முடிக்கிவிட வேண்டும்.
அனைத்து ஊர்களில் நிவாரண குழு, மீட்பு பணி குழுவை அமர்த்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக பாதுகாக்கும் வகையில் நிவாரண பணிகளை மிக வேகமாக அமுல்படுத்த வேண்டும்.
புதுச்சேரி அரசின் மனித வளம் குறைப்பாட்டை சரி செய்ய NCC/NSS மாணவர்களையும், வாலிபர்களையும் மீட்பு பணியில் ஈடுபடுத்த
வேண்டும்.
தன்னார்வம் உள்ள இளைஞர்களை அரசு அழைத்து மீட்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள மாணவர்கள், வாலிபர்கள் நமது புதுச்சேரியை பாதுகாக்க மீட்பு பணியில் தங்களை இணைத்துக் கொண்டு புதுச்சேரியை
மீண்டும் கட்ட வேண்டும் என்று வாலிபர் சங்கம் மிக தாழ்மையுடன் கேட்க்கொள்கிறது.
இப்படிக்கு
(த.தமிழ்செல்வன்)
பிரதேச செயலாளர்
DYFI
No comments:
Post a Comment