புதுச்சேரியில் காதலர்களை அவமதிக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிர்ப்பு
புதுச்சேரி, பிப். 15-புதுச்சேரியில் காதலர் களை அவமதிக்கும் மத அடிப்படைவாதிகளை வாலிபர், மாணவர் சங்கத்தி னர் முற்றுகையிட்டனர்.புதுச்சேரி பாரதி பூங்கா வில் வியாழக்கிழமை (பிப். 14) காதலர் தினத்தை கொண் டாடும் வகையில் காதலர் கள் பூங்காவிற்கு வரும் போது அவர்களிடம் இந்து முன்னனியை சேர்ந்தவர்கள் ரகளையில் ஈடுபட உள் ளதை அறிந்த இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச பொருளாளர் ஆர். சரவணன், நகர கமிட்டி நிர்வாகிகள் அழகப்பன், பிர தாப், நாகமுத்து, இந்திய மாண வர் சங்க பிரதேச செயலா ளர் ஆனந்து, துணை தலை வர் ரஞ்சித் ஆகியோர் தலை மையில் திரளான வாலிபர் கள் பாரதி பூங்காவிற்கு சென்று காதலர் தினத்தை வரவேற்று தட்டிகளை ஏந்தி முழக்க மிட்டனர்.அப்போது அவ்விடத் திற்கு வந்த இந்து முன்ன ணியை சேர்ந்தவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தங்களது நோக் கம் நிறைவேறாததால் இந்து முன்னணியினர் அவ்விடத் தில் இருந்து நடையை கட்டி னர். உடனே அவ்விடத்திற்கு வந்த காவல்துறையிடம் காத லர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர்.சென்ற ஆண்டு இதே போல் பாரதி பூங்காவில் காதலர்களிடம் இந்து முன் னணியினர் ரகளையில் ஈடு பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் புதுச்சேரி முழு வதும் வாலிபர் சங்க கிளை களில் காதலர் தினத்தை முன் னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
No comments:
Post a Comment