புதுச்சேரி,ஆக-28
புதுச்சேரியில் புதிய மதுபான கடை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் ,கிழக்கு கடற்கரைசாலையில் புதியதாக மதுபான கடை திறப்பதை உடனே கைவிடவேண்டும்.கடைதிறப்பதற்கு உரிமம் அளித்த புதுச்சேரி கலால்துறை திரும்பபெற வேண்டும்.நீண்ட காலமாக கழிவரை இல்லாத சாமிப்பிள்ளை தோட்டம் மக்களுக்கு கழிவரை கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.
சாமிப்பிள்ளை தோட்டம் ஈசிஆர் சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் ஜெயலச்சுமி,ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உழவர்கரை கமிட்டி செயலாளர் முரளி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின்துரை,டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் சரவணன்,துணை தலைவர் பாஸ்கர்,மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளான அப்பகுதி பெண்களும்,வாலிபர்களும்,பெரியவர்களும் பங்கேற்றனர்.முன்னதாக மதுபான கடை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து கருப்பு கொடியுடன் பெண்கள் முழக்கமிட்டனர்.