Tuesday, August 6, 2013

காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரி சட்டகல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கனிப்பு.

புதுச்சேரி,ஆக-5
காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரி சட்டகல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கனிப்பு.

இந்தியா மாணவர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் புதுச்சேரி சட்டகல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவருமாகிய அறிவழகன் சம்பவத்தன்று மாணவர் சங்க மாநாட்டு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும போது அங்கு வந்த விழப்புரம் மாவட்ட போக்குவரத்துறை உதவி ஆய்வாளர் அருணாச்சலம் தகாத வார்த்தையால் திட்டியதோடும், சட்டக்கல்லூரி மாணவர் என்று சொல்லியும் அடிக்க முற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் திங்களன்று (ஆக-5) புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.
இப்போராட்டத்திற்கு சட்டக்கல்லூரி மாணவர்களான இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.முன்னதாக சட்டக்கல்லூ மாணவர்கள் வகுப்புகளை புறக்கனித்தோடு விழுப்புரம் மாவட்டகாவல்துறை உதவி ஆய்வாளர் மீது துறைச்சார்ந்த நடவடிக்கை எடுக்குமாறு காலாப்பட்டு கல்லூரி முன்பு முழுக்கமிட்டனர்.மேலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்கண்கானிப்பாளர் ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் புகார் கடிதமும் அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment