Saturday, November 30, 2013

பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட 4ஆசிரியர்களை கைது செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,நவ.30-
பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட 4ஆசிரியர்களை கைது செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அரசு பள்ளியில் கனினியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்த  4ஆசிரியர்களை  பாலியல் வன்புனர்ச்சி சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய  வேண்டும். நான்கு ஆசிரியர்களை நிரந்தரமாக பணியில் இருந்து  கல்வித்துறை நீக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம
நடைபெற்றது.

புதுச்சேரி கல்வித்துறை எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்க பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.மாதர் சங்க பிரதேச துணைத்தலைவர் சுமதி,டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.மாதர் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து,சந்திரா,ஜெயலச்சுமி,வாலிபர் சங்க நிர்வாகிகள் பாஸ்கர்,அழகப்பன்,நாகமுத்து உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக புதுச்சேரி மகளிர் ஆணையத்தை செயல்படுத்தக்கோரி முழக்கமிட்டனர்.

கல்வித்துறை இடைநீக்கம்
இந்நிலையில் ஆபாச படம் காண்பித்த ஆசிரியர்கள் நான்கு பேரையும் புதுச்சேரி கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிரபித்துள்ளது.இதற்கான உத்தரவை கல்வித்துறை பிரபித்துள்ளது.

No comments:

Post a Comment