Thursday, January 12, 2012

பத்திரிக்கை செய்தி - புதுச்சேரி தானே புயலில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர்


புதுச்சேரி தானே புயலில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். விவசாயிகள் விவசாய விளை நிலங்கள் சேதமடைந்துள்ளது. மீனவர்கள் முழுமையாக அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஏழைகள் குடிசைகளை இழந்துள்ளனர். மின்சாரம் முழுமையாக கிராமங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இயந்திரம் மிக மிக மெதுவாக நகர்கிறது, இது சரியல்ல. புதுச்சேரி அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் புதுச்சேரி மக்களை பாதுகாக்க தற்காலிகமாக தங்கும் இடம், இரவு நேரங்களில் மின்சாரம், சுத்தமான குடிநீர் வழங்கவும், உணவு ஏற்பாடு செய்யவும் அரசு இயந்திரங்களை முடிக்கிவிட வேண்டும்.

 அனைத்து ஊர்களில் நிவாரண குழு, மீட்பு பணி குழுவை அமர்த்த வேண்டும்.
 பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக பாதுகாக்கும் வகையில் நிவாரண பணிகளை மிக வேகமாக அமுல்படுத்த வேண்டும்.
 புதுச்சேரி அரசின் மனித வளம் குறைப்பாட்டை சரி செய்ய NCC/NSS மாணவர்களையும், வாலிபர்களையும் மீட்பு பணியில் ஈடுபடுத்த
வேண்டும்.
 தன்னார்வம் உள்ள இளைஞர்களை அரசு அழைத்து மீட்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
 புதுச்சேரியில் உள்ள மாணவர்கள், வாலிபர்கள் நமது புதுச்சேரியை பாதுகாக்க மீட்பு பணியில் தங்களை இணைத்துக் கொண்டு புதுச்சேரியை
மீண்டும் கட்ட வேண்டும் என்று வாலிபர் சங்கம் மிக தாழ்மையுடன் கேட்க்கொள்கிறது.

இப்படிக்கு



(த.தமிழ்செல்வன்)
பிரதேச செயலாளர்
DYFI

Tuesday, December 20, 2011

பாலியல் குற்றத்திலிருந்து பெண்களை பாதுகாக்க பாலியல் துன்புறுத்தல் சட்டம் கொண்டு வருவேண்டும்


புதுச்சேரி,டிச-18
பாலியல் குற்றத்திலிருந்து பெண்களை பாதுகாக்க பாலியல் துன்புறுத்தல் சட்டம் கொண்டு வருவேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுசெயலாளர் சுதாசுந்தரராமன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி ஜி தங்கும் விடுதியில் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் ஈடுபடுத்திய குற்றவாலிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் சம்பந்தபட்ட விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மருத்தவ பரிசோதனைக்காக காவல்துறை கட்டுபாட்டில் இருந்த இளம்பெண் காணாமல் போனதாக காவல்துறை கூறுவதை கண்டித்து மாதர்,வாலிபர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேருவீதி காந்தி வீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் பங்கேற்று பேசுகையில்,
நாடுமுழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.இதில் பெண்களுக்கெதிரான குற்றங்கங்களே அதிகமாக நடைபெறுகிறது.குறிப்பாக ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் பெண்கள் பாலியல்ரீதியான குற்றத்தில் பாதிக்கபடுகின்றனர்.ஒரு நாளைக்கு 56பெண்களும்,ஒரு மணிநேரத்திற்கு 3 பெண்கள் என பாதிக்கபடுகின்றனர்.பாதிக்கபடும் பெண்கள் மீதே சிலஅவதுhறுகளை பரப்பி குற்றத்தை நியாயப்டுத்தும் சம்பவம் ராஜாஸ்தான் மாநிலத்தில் அன்மையில் நடந்தேறியுள்ளது.எனவே தண்டனை குறைவாக இருப்பதால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.எனவே பாலியல் துண்புருத்தல் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றார்.
இப்போராட்டத்தில் மாதர் சங்க பிரதேச தலைவர் தெய்வானை,செயலாளர் சத்தியா,நிர்வாகிகள் சுமதி,இளவரசி, வாலிபர்சங்க சங்க தலைவர்கள் சந்துரு,பிரபுராஜ்,சரவணன்,பார்த்தசாரதி,பா°கர் உள்ளிட்ட திரளான வாலிபர்கள்,மாதர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tuesday, December 13, 2011

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தில் புதிய கிளை திறப்பு



புதுச்சேரி,டிச-12
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா.
புதுச்சேரி அரியாங்குப்பம் சண்முகாநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா நடைபெற்றது.இப்பெயர்பலகை திறப்பு விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் கிளை தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார்.இவ்விழாவில் டிஒய்எப்ஜ பிரதேச இணைசெயலாளர் எஸ்.சரவணன் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்தார்.சங்கத்தின் பெயர் பலகையை பிரதேச செயலாளர் டி.தமிழ்செல்வன் திறந்து வைத்து பேசினார்.பிரதேச தலைவர் கே.சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,நகர தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் பார்த்தசாரதி,பாகூர் கொம்யூன் செயலாளர் அரிதாஸ்,இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
கிளை செயலாளர் பிரவீன்வேலியப்பன்,மோகன்ராஜ்,நகுலன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மற்றும் சண்முகாநகர் மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி,டிச-12
மாணவர் சிறப்புபேருந்து இயக்காததை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு சார்பில் மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் புதுவை முழுவதும் இயக்கப்பட்டுவருகிறது. கரிகலாம்பாக்கம் பகுதியில் இயக்கப்பட்ட பேருந்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் இயக்கபடாததால் கிராமப்புற மாணவர்கள் தணியார் பேரூந்தில் அதிய கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.எனவே சிறப்பு பேருந்து இயக்ககோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்ளின் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கரிகலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பில் நடந்த இப்போராட்டத்திதல் எஸ்எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து ,வாலிபர் சங்க நிர்வாகிகள் அரிதா°,சண்முகம்,பத்மநாபன்,விவிசாய சங்க நிர்வாகி ரத்தினவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர் பேச்சுவர்த்தை
போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க நிர்வாகியிடம் அமைச்சர் ராஜவேலு செல்பேசியில் தொடர்பு கொண்டு பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Friday, December 9, 2011

வெளிநாட்டு பல்கலைகழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் மசோதாவை கைவிடு


* வெளிநாட்டு பல்கலைகழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் மசோதாவை கைவிடு!
* AICTE,MCI,UGC உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை களைத்துவிட்டு நம் நாட்டின் பேருமுதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழு பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தும் தேசிய கல்வி ஆணைய மசோதாவை கைவிட கோரி!

* மாநில அரசுகளின் கல்வி குறித்த அதிகாரங்களை பறிக்கும் வகையில் மத்திய அரசின் அதிகார குவியலை கண்டித்து!

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் போராடியதோ,அதே போல் மாணவர் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள உயர்கல்வியை சீரழிக்கும் ஐந்து மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும் இந்திய மாணவர் சங்கம் , புதுச்சேரி பிரதேச குழுவும் பல்கலைகழக கிளையும் கேட்டுக்கொள்கிறது.
தலைமை :சாஹீத்ரூமி {கன்வீனர் SFI,பல்கலைகழக கிளை}
முன்னிலை :மானபெந்துசர்கார்,ஜாஸ்மின்,அரு ண்குமார் {SFI,பல்கலைகழக கிளை}
கண்டனஉரை :பகத்சிங் {SFI,பல்கலைகழக கிளை , ஆனந்த் {SFI,புதுவை பிரதேச செயலாளர்} சாத்வீக்பாநர்ஜி {லயோலா கல்லூரி ஆராய்ச்சி மாணவர் SFI,தலைவர்களில் ஒருவர் }பிரபுராஜ் {DYFI புதுச்சேரி பொருளாளர் }
வாழுத்துரை:DYFI பிரதேச துணைதலைவர் சரவணன்,உழவர்கரை நகரசெயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க பிரதேச துணைதலைவர் ரஞ்சித்

Friday, December 2, 2011

பெண்ணை பாலியல் தொழிலுக்கு பயண்படுத்திய கஸ்ட் ஹவுசை முற்றுகை


புதுச்சேரி நவ-27
புதுச்சேரியில் பெண்ணை பாலியல் தொழிலுக்கு பயண்படுத்திய கஸ்ட் ஹவுசை முற்றுகையிட்ட பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த கனேசன் மகள் அமுதா (வயது-19 பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்ற இளம் பெண்ணை புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள ஜி க°ட்ஹவுஸில் வலுகட்டயமாக அடைத்து வைத்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற போது அப்பெண் ஜன்னல் வழியாக கூச்சலிட்டதால் அருகில் உள்ள பெரியகடை காவல்நிலையத்தில் புகார் கூறியதின் பேரில் போலீஸார் சம்பவஇடத்திற்கு நேரில் வந்து விசாரித்தனர்.அப்போது கஸ்ட் ஹவுஸ் மேலாளர் மதன் உட்பட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4பேர்களை போலீஸார் கைது செய்தனர்.எனவே பாலியல் தொழிலுக்கு பயண்படுத்தப்பட்ட ஜி க°ட் ஹவுஸை உடணடியாக +மூடி சீல் வைக்க வேண்டும்.பாரபட்சமில்லாமல் க°ட் ஹவுசின் உரிமையாளரை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி முழுவதும் உள்ள தனியார் க°ட் ஹவு°களை கன்கானிக்கவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர்,வாலிபர்,மாணவர் சங்கநிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கஸ்ட்ஹவுஸின் கதவுகளை அடைத்துகொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணைதலைவர் ஜெயலட்சுமி,நிர்வாகிகள் சரோஜினி,மகாலட்சுமி,வாலிபர் சங்க பிரதேச தலைவர் சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,நகரதலைவர் சரவணன்,செயலாளர் பார்த்தசாரதி,உழவர்கரை நகரசெயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க பிரதேச துணைதலைவர் ரஞ்சித் உள்ளிட்ட 14 பெண்கள் உட்பட 35பேர்களை போலிஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Wednesday, November 16, 2011

மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்


புதுச்சேரி நவ-14
மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டிஒய்எப்ஜ புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாஹே பகுதிகுழு வின் செயலாளர் கே.பி.நௌஷாத்,பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
மாஹே மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிக்கு முதலில் ரூ.25கோடி ஒதுக்கப்பட்டது பின்னர் கட்டுமான பணிக்காக கூடுதலாக ரூ.75கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இதேப்போல் மாஹே உள்விளையாட்டு அரங்கம் ரூ.19கோடிக்கு கட்டி முடிக்கப்பட்டு இதுநாள்வரை பூட்டப்பட்டுள்ளது.அதேப்போல் கேரள விருந்தினர் மாளிகைக்கு ஆற்று மேல் மேம்பாளம் கட்டியதிலும்,மாஹே ஆற்றையொட்டி உள்ள சுற்றுலாதுறைக்கு சொந்தமான அரசு கட்டிடத்தை தனியார் மதுபான கடைக்கு வாடகை விட்டதில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது. கடந்த மூன்று முறை மாஹே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு காங்கிர° அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொருப்பு வகித்த வல்சராஜ் ,மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பல்வேறு ஊழல் செய்து அவரது உறவினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.எனவே முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது புதுச்சேரி முதல்வர் சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் மாஹேவில் உள்ள பாப்°கே நிறுவனம் கேரளாவில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் மூலம் விவசாய பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்வதை போல் புதுச்சேரியிலும் அத்தகைய நிலையை அரசு கடைபிடிக்க வேண்டும்.மாஹே கல்லுhரிகளில் கேரளா மாணவர்கள் சிறமமின்றி படிக்க முடிந்தது.அதேப்போல் மாஹே மாணவர்களும் கேரளாவில் படித்தார்கள்.தற்போது மாஹேவில் கேரளா மாணவர்கள் படிக்க தடைவிதித்துள்ளதால் உயர் படிப்புக்கு கேரளா சென்று மாஹே மாணவர்கள் படிக்க முடியவில்லை எனவே பழைய முறையை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.மாஹே ஆயுர்வேதா மருத்துவகல்லுhரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி போது மான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.
பேட்டியின் போது மாஹே பகுதிகுழு நிர்வாகிகள் ஸ்ரீகாந்த்,வினெய்குமார்,பிரதேச நிர்வாகிகள் பிரபுராஜ்,சரவணன்,SFI பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Wednesday, November 9, 2011

நீதி விசாரணை நடத்த வேண்டும்


புதுச்சேரி நவ-1
பள்ளி பேருந்து கவிழ்ந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி முதல்வரை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த பாகூர் கடுகனூரில் பள்ளி மாணவர்கள் சென்ற ஒரு ரூhபய் கட்டண பேருந்து கவிழ்ந்ததில் மணப்பட்டு பகுதியை சேர்ந்த மாணவி ஹேமலதா (12) சம்பவ இடத்திலேயே பலியானர்.மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பிள்ளனர்.பாகூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பேரூந்தில் ஏற்றிசெல்வதற்கு ஏழு பேருந்துகள் அவ்வழிதடங்களில் இயக்க வேண்டும்.ஆனால் சம்பவத்தன்று நான்கு பேருந்துகளை மட்டுமே இயக்கப்பட்டதால் கரையாம்பத்துhர்,கடுகனுhர்,குருவிநத்தத்தை சேர்ந்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரூந்தில் பயணம் செய்ததின் விளைவாக பேருந்து கடுகனூரில் வயல்வேளியில் கவிழ்ந்தது.
மருத்துவனையில் ஆருதல்
பேருந்து கவிழ்ந்ததில் காயம் அடைந்த மாணவர்கள் கடலுhர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.அப்போது புதுச்சேரி மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ரங்கசாமியிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் நடந்த சம்பவங்கள் குறித்து நீதி விசாரனை நடத்த வேண்டும்.இறந்த மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை =எடுப்பதாக உறுதியளித்தார்.மேலும் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லததை கண்டித்து கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகர செயலாளர் என்.பிரபுராஜ் ஆகியோர் தலைமையில் திரளானோர் சென்று மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து முழக்கமிட்டனர்.
2 லட்சம் இழப்பீடு
இறந்த மாணவி ஹேமலதா குடும்பத்திற்கு முதல்வர் என்.ரங்கசாமி ரூ.2லட்சம் இழப்பீட்டு தொகை அரசு சார்பில் வழங்கபடும் என்று அறிவித்தார்.அதேப்போல் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.10ஆயரமும் வழங்கபடும் என்று ம் சாதாரணம் காயங்கள் ஏற்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.5ஆயிரமும் வழங்க படும்.விபத்து குறித்த நீதி விசாரணை நடத்த படும்.அதேப்போல் வருங்களத்தில் விபத்து நடக்காத வண்ணம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.