Friday, August 20, 2010

வாலிபர் சங்க பிரதேச மாநாடு



புதுச்சேரி அரசு காலிபணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச மாநாடு வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச 12வது மாநாடு ஆக°ட் 14 15, தேதிகளில் பாகூரில் நடைபெற்றது.
தோழர் வேலூச்சாமி நினைவரங்கத்தில் நடந்த மாநாட்டிற்கு தட்சணாமூர்த்தி, சுகன்யா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ஆசிரியர் நா.சண்முகம் பிரதிநிதிகளை வரவேற்றார், டிஓய்எப்ஐ தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். தமிழ் மாநில இணைச் செயலாளர் டி.வி.மீனாட்சி ஏஐஓய்எப் மாநிலத்தலைவர் அந்துவான் அறிவியல் இயக்கத்தை சேர்ந்த விஜயமூர்த்தி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.
மாநாட்டு வேலை அறிக்கையை பிரதேச செயலாளர் ச.மணிபாலன் சமர்பித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் என்.பிரபுராஜ் தாக்கல் செய்தார். இறுதியாக டிஓய்எப்ஐ தமிழ் மாநில தலைவர் எ°.ஜி.ரமேஷ்பாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
மாநாட்டில் பிரதேச புதிய தலைவராக க.சந்துரு, செயலாளராக த.தமிழ்ச்செல்வன், பொருளாளராக என்.பிரபுராஜ், உள்ளிட்ட 20 பேர் கொண்ட பிரதேசக் குழு தேர்வ செய்யப்பட்டனர்.
முன்னதாக முதல் நாள் நடந்த மாநாட்டு பேரணியை சிபிஎம் பிரதேச செயலாளர் வெ. பெருமாள் துவக்கிவைத்தார். இம்மாநாட்டில் புதுச்சேரியில் பெருகிவரும் சமூக குற்றங்களை கட்டுபடுத்த புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அரசு துறைகளில் அமைச்சர்கள் கையாளும் முறைக்கேடான நேரடி நியமனத்தை கைவிடவேண்டும், முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை உத்திரவாதப்படுத்த வேண்டும், அரச அறிவித்த வேலையில்லா கால நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் அரசு மருத்துவ கல்லூரியை துவங்க வேண்டும், நின்று போன காமராஜர் கல்வி உதவி நிதியை மீண்டும் வழங்க வேண்டும், 100 நாள் கிராமப் புற வேலை உறுதி திட்டத்தை காரைக்கால் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும், பாகூரில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
படம் உள்ளது.
குறிப்பு மாநாட்டையொட்டி பாகூரில் மேற்கு வீதியில் நடந்த பொது கூட்டத்தில் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் எ°.ஜி.ரமேஷ்பாபு பேசுகிறார். உடன் மாநில இணைசெயலாளர் மீனாட்சி, பிரதேச நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சந்துரு, பிரபுராஜ் உள்ளிட்டோர்.

No comments:

Post a Comment