Tuesday, February 22, 2011
24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
புதுச்சேரி பிப் 16
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 படுக்கை வசதிகளுடன் அறுவை சிகிச்சை மையத்தை ஏற்படுத்திடக் கோரி வாலிபர் சங்கத்தின் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் பாகூரில் நடைப்பெற்றது.
பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகளை ஏற்படுத்தி தரவேண்டும். 24 மணிநேரமும் மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகூர் பேருந்து நிலைய பணியை விரைந்து துவக்க வேண்டும். மாணவர்களுக்கான கலைக்கல்லூரியை அமைத்துக் கொடுக்க வேண்டும். பாகூர் ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்றி சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.
பாகூர் மேற்கு வீதியில் காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமைத் தாங்கினார். டிஒய்எப்ஐ தமிழ்மாநில செயலாளர் வேல்முருகன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார். போராட்டத்தை வாழ்த்தி பிரதேச நிர்வாகிகள் பிரபுராஜ், சரவணன், ஷண்முகம், லெனின் பாரதி ஆகியோர் பேசினார்கள். பாகூர் கொம்யூன் தலைவர் சரவணன், செயலாளர் அரிதா°, பொருளாளர் வீரப்பன் உள்ளிட்ட திரளான இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
புதுச்சேரி பிப் 16
அரசு மருத்துவ பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து சுகாதாரத் துறை ஊழியர்கள், செவிலியர்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிக்கு 300 படுக்கைகள் கொண்ட தனி மருத்துவமனையை உருவாக்கி நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனையின் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பi கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment