Sunday, March 6, 2011

வாக்குகளை விலைபேசுவதை கண்டித்து



புதுச்சேரி மார்ச் 5
சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளை விலைபேசுவதை கண்டித்து வாக்காளர்களை விழிபுனர்வு ஏற்படுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் துண்டு சுவரொட்டிகள் புதுவையில் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலையொட்டி லா°பேட்டை,உருளையன்பேட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு புடவைகள்,சமையல் பாத்திரங்கள் இலவசமாக வழங்கிவந்து இருப்பதை கண்டித்தும் இத்தகைய இலவசங்களை வழங்குபவர்களை மக்கள் அடையாளம் கண்டு புரக்கணிக்க வேண்டும் என வலியுருத்தி டிஒய்எப்ஜ,எ°எப்ஜ சார்பில் நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற துண்டு சுவரொட்டிகள் மக்களிடையே விழிபுனர்வை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளனர்.
வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,துரைமுருகன், மாணவர்சங்க செயலாளர் ஆனந்து,ரஞ்சித்,பார்த்தசாரதி ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சனிக்கிழமை சுவரொட்டிகளை வெளியிட்டனர்.மேலும் இந்த சுவரொட்டிகளை லா°பேட்டை,பாகூர்,திருபுவனை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து வழங்க உள்ளோம் என்றும் கூறினர்.

No comments:

Post a Comment