
புதுச்சேரி ஆக-29
புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங்கை உடனடியாக பதவியிலிருந்து திரும்ப பெற வேண்டும் என்று வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
வாலிபர் சங்கம் சார்பில் ஊழலுக்கு எதிரான பிரச்சார தெருமுனைக்கூட்டம் கரிக்கலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பு சாலையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் அரிதா° தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசசெயலாளர் தமிழ்ச்செல்வன் பேசுகையில்,
புதுச்சேரி மக்களை பாதுகாக்க வேண்டிய துனைநிலை ஆளுநர் இக்பால்சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மகன்கள் இடம்பெற்ற அறக்கட்டளைக்கு மருத்துவகல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றால் அரசியல் சாசனத்தை மிறியசெயலில் ஈடுபட்ட அவரை மத்திய அரசு உடனடியாக திரும்பபெறவேண்டும்.மாதம் ஒன்றுக்கு மக்கள் வரிபணத்தில் 1.5லட்சத்திற்கு காய்கறி செலவு செய்கிற =ஆளநர் இக்பால் திரும்ப பெற்று அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.இக்கூட்டத்தில் பொருளாளர் பிரபுராஜ்,வில்லியனுhர் இடைகமிட்டி செயலாளர் சண்முகம்,மாணவர் சங்க பிரதேசசெயலாளர் ஆனந்து,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.வாலிபர் சங்க நிர்வாகிகள் பச்சையப்பா,பத்மநாபன்,விஜயமூர்த்தி,ராமமூர்த்தி,ராகவன்,ஆனந்த்,அரளரசன்,உமாபதி உள்ளிட்ட திரளான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment