Sunday, October 9, 2011
கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி
புதுச்சேரி அக்-8
கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி புதுச்சேரியில் வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டிவனம் தாகூர் பள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி 10ஆம் வகுப்பு துணைத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய குற்றத்தில் சிக்கிய புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.சுனாமி குடியிருப்பு கட்டியதில் தோடர்புள்ள முன்னால் மாவட்ட ஆட்சியர், ஊழல் அதிகாரி ராகேஷ் சந்திராவை பணிஇடைநீக்கம் செய்ய வேண்டும்.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் மகன்களுக்கு மருத்துவக்கல்லுhரி துவங்க அனுமதி அளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திரும்பபெற வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காந்திவீதி-நேருவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,எ°எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து,துனைதலைவர் ரஞ்சித்,டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,துனைத்தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.வாலிபர்,மாணவர் சங்கங்களின் நிர்வாகிள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரி கல்விதுறை அமைச்சர் கல்யாணசுந்தரம் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.திண்டிவனத்தை அடுத்துள்ள தனியார் பள்ளியான தாகூர் மெட்ரிக்குளேஷன் பள்ளியில் நடந்த துணைத்தேர்வில் போலியான முகவரியை கொடுத்தும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்ய விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி சனிக்கிழமை (அக்-8)திண்டிவனம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.எனவே முறைகேடுகளில் ஈடுபட்ட கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை முதல்வர் ரங்கசாமி உடணடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்=என மார்க்சி°ட் கட்சி உள்ளிட்ட மாணவர் வாலிபர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment