Thursday, September 27, 2012

வாழ்நாள் முமுவதும் மறக்கமாட்டோம் என்று வாலிபர் சங்க தலைவர்களுக்கு கண்ணீர் மல்க தங்களது நன்றியை தெரிவித்த மக்கள்

புதுச்சேரி,செப்-27
புதுச்சேரி சட்டபேரவை எதிர்கட்சி தலைவர் தொகுதியில் பலமாதங்களாக மின் இனைப்பு இல்லாத அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த 38 குடும்பங்களுக்கு  மாதர்,வாலிபர் சங்கங்களின் முன்முயற்சியால் மின்சாரம் வழங்கப்பட்டது. புதுச்சேரி காமராஜர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகர் உள்ளது.இந்நகரில்  மொட்டை தோப்பு என்ற பகுதியில் பால மாதங்களாக குடியிருந்த 38 குடும்பங்களுக்கு  குடிசை மாற்று வாரியத்தால்  அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது.சுமார் 1கோடிக்கு மேற்பட்ட தொகையில்  கட்டப்பட்ட குடியிருப்புகள் கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு  முன்பு  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அப்படி ஒப்படைக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இனைப்பு மட்டும் கொடுக்கப்பட வில்லை.நகரத்தை யொட்டி உள்ள இந்த குடியிருப்பில் மட்டும் மின் இனைப்பு இல்லாமல் கடந்த 18 மாதங்களாக  இருட்டிலே யே 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வாழ்ந்து வந்துள்ளனர்.

இத்தகவலை  அறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுவை பிரதேச துணைதலைவர் வி.சுமதி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் சரவணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஏன் மின் இணைப்பு பெறுவதற்கான  முயற்ச்சிகள் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.மேலும்  மின்துறை அதிகாரிகளை சந்தித்து  கேள்வி எழுப்பிய சங்க நிர்வாகிகளிடம் குடிசை மாற்று வாரியம் மின்துறைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.9ஆயிரத்தி 460 மட்டும் செலுத்த வில்லை.அதானலே மின் இனைப்பு வழங்கபடவில்லை என்று கூறினார்.பின்னர் குடிசை மாற்று வாரியத்தின் அதிகாரிகளை சந்தித்து கேள்வி எழுப்பிய டிஒய்எப்ஐ தலைவர்கள்  ஒரி இரு நாட்களில் அத்தொகையை மின்சாரத்துறைக்கு செலுத்தவில்iல் என்றால் பொதுமக்களிடம் வாலிபர் சங்கம் உண்டியல் மூலம் வசூலித்து அத்தொகையை செலுத்தும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டம்
குடிசை மாற்று வாரியம்,மின்துறை அலட்சியத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்ககோரி மாதர் சங்கம்,வாலிபர் சங்கங்கள் சார்பில் செப்டம்பர் 3 ஆம்தேதி  புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள மின்துறையின் இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் இணைப்பு வழங்கப்பட்டது
குடிசை மாற்று வாரியம் உடனே மின்துறைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.9ஆயிரத்து 460 யை செலுத்திய உடனே மின்துறை ஒரு வாரத்திற்குள் குடியிருப்புகளுக்கு மின்சார  இணைப்பு வழங்கியது.
தலைவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்த குடியிருப்பு மக்கள்
மின் இணைப்பு பெற்ற குடியிருப்பு மக்கள் சார்பில்  வாலிபர்,மாதர் சங்க தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்  சுதந்திர பொன்விழா நகரில் நடைபெற்றது. சிஜடியு மாவட்ட துணை தலைவர் ராஜாங்கம்,மாதர் ,வாலிபர் சங்க தலைவர்கள் சுமதி, சரவணன், பிரபுராஜ், விஜிய், அழப்பன், தமிழ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நீண்ட காலமாக அக்குடியிருப்பில் வசித்து வரும்   கலா  கூறுகையில்,கடந்த ஒன்றறை வருடங்களுக்கு முன்பு இந்த குடியிருப்பில் வசித்து வருகிறோம். தினந்தோரும் இரவு நேரங்களில் இருட்டிலேயே கொசுக்கடியிலேயே , பிள்ளைகளோடு வாழ்ந்து வந்துள்ளோம்.தேர்ந்தேடுக்க படுவதற்கு முன்பு உடனே மின்சாரம் பெற்று கொடுப்பேன் என்றெல்லாம் வாக்குறுதி அளித்த முன்னால் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான வெ.வைத்தியலிங்கம் தேர்வான பிறகு  இந்த பக்கமே ஆலே கானோம்.மக்கள் பிரதிநிதிகளே எங்களை பற்றி கவலை படவில்லை.நாங்களும் மின்சாரத்துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீங்கள் எங்களுக்காக போராடி மின் இணைப்பு பெற்று தந்துள்ளிர்கள்.போராட்டம் நடத்த எங்களுக்கு அழைப்பு கோடுத்தபோது நாங்களும்  உங்களை உதாசீன படுத்தினோம். அப்போராட்டத்தில் ஒருவர் கூட பங்கேற்காதது மண வருத்தத்தை அளிக்கிறது.அதையும் மீறி எங்களது வாழ்க்கையில் ஒளி அமைத்து கொடுத்ததை தங்களது வாழ்நாள் முமுவதும் மறக்கமாட்டோம் என்று  வாலிபர் சங்க தலைவர்களுக்கு கண்ணீர் மல்க தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Wednesday, September 12, 2012

DYFI 9th ALL INDIA CONFERENCE , Bangalore

வாலிபர் சங்க மாநாடு துவங்கியது பெங்களூருவில் இளைய இந்தியா குழுமியது


பெங்களூரு (கேப்டன் லட்சுமி செகால் நகர்),செப்.11-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் 9வது அகில இந்திய மாநாடு பெங் களூருவில் செவ்வாயன்று மாபெரும் பேரணி - பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. மெஜஸ்ட்ரிக் ரயில் நிலையம் அருகிலிருந்து பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட வண்ணமிகு பேரணி அனைவரையும் கவர்ந்தது. மாநாட்டில் ஏற்ற வேண் டிய கொடி கூத்துப்பரம்பு தியாகிகள் நினைவாக கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தது. சிவப்பு நட்சத்திரம் பொறித்த இந்த வெண்கொடியை சிறுவர்கள் ஏந்தி வர அதன் பின்னால் சங்கத்தின் தேசிய தலைவர்களும் வெளிநாட்டு பிரதிநிதிகளும், தொடர்ந்து நீல நிற சீருடை அணிந்த மாநாட்டு பிரதிநிதிகள், அடுத்ததாக வெள்ளை சீருடையுடன் ஆயிரம் ஆயிரமாய் இளைஞர்களும் அணி வகுத்து வந்தனர். பல்வேறு மாநி லத்தவரும் அவரவர்களது பாரம் பரிய அடையாளங்களை வெளிப் படுத்தும் கலைநிகழ்ச்சிகளுடன் அணிவகுத் தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
பேரணியைத் தொடர்ந்து நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., கர்நாடக மாநி லத்தை சேர்ந்த பிரபல விடுதலைப் போராட்ட வீரர் எச்.எஸ்.தொரே சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஸ்ரீராமரெட்டி, கர்நாடக விவசா யிகள் சங்க தலைவர் ஜி.சி.பையா ரெட்டி, வாலிபர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் தபஸ் சின்கா, முன்னாள் செயலாளர் எம்.ஏ.பேபி, கர்நாடக மாநில தலைவர் என்.எல். பரத்ராஜ், செயலா ளர் பி.ராஜசேகர மூர்த்தி, துணை தலைவர் எஸ்.கண் ணன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.கூட்டத்தில் யெச்சூரி பேசும்போது, நாட் டின் மூன்றில் ஒரு பகுதியினராக உள்ள இளைஞர்கள் வளமான இந் தியாவை உருவாக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.40 வயதுக்கு உட்பட்ட இளைஞர் கள் இந்திய நாட்டின் மக்கள் தொகை யில் மூன்றில் இரண்டு பகுதியினராக உள்ளனர். இவர்கள்தான் நமது நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என் பதை தீர்மானிக்க வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார்.உலகம் முழுவதும் இப்போது முதலாளித்துவத்துக்கு மாற்று பாதை குறித்த சிந்தனை மேலொங் கியுள்ளது. மதத்தின் பேரால் மக்களை துண்டாட அனுமதிக்காமல் இந்தியாவின் வளத் தை பாதுகாத்து ஒளிமய மான பாரதத் தை உருவாக்க இளை ஞர் சக்தி எழுச்சி பெற்று வர வேண்டும். சோச லிசம் ஒன்றே மாற்று என்பதை நிலை நாட்ட வேண்டும் என்று யெச்சூரி பேசினார். இக்கூட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி. ஸ்ரீராம கிருஷ்ணன் தலைமை வகித்தார்.பிரதிநிதிகள் மாநாடு பிற்பகலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப்டம்பர் 15ம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது.

Monday, September 10, 2012

கூடங்குளத்தில் போலீஸ் தாக்குதல்

கூடங்குளத்தில் போலீஸ் தாக்குதல்
திருநெல்வேலி, செப். 10 -

நெல்லை மாவட்டம் கூடங்குளத் தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி கடற்கரை பகுதிகளில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்திவந்த நிலையில் அவர்களை கலைக்க போலீசார் திங்களன்று தடியடி நடத்தி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாக கூடங்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந் தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதையொட்டி திருச்செந்தூர் அருகே காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில்மீனவர் ஒருவர் பலியானார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே, அணு உலை எதிர்ப்பாளர் கள் திங்களன்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்த நிலை யில், முற்றுகையை கைவிடுமாறு காவல்துறை கண்காணிப்பாளர் விஜ யேந்திர பிதாரி கேட்டுக் கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் முற்றுகையை கை விட மறுப்பு தெரிவித்தனர்.

அந்தநேரத்தில் போராட்டக் குழுவை சேர்ந்த 7 பேர் 2 படகுகளில் கடல்வழியாக சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்பகுதி யில்,அணுமின் நிலைய சுற்றுச் சுவருக்கு அருகில் இறங்கினர். இத னை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்கச் சென்ற போது, அவர்கள் தாங்கள் வந்த படகில் ஏறி திரும்பிச் சென்று விட்டனர்.

இந்நிலையில் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற இடிந்த கரையை சேர்ந்த டென்சிலின் (வயது 45) உள்பட 2 பேர், போலீசாரின் தடுப்பை மீறி அணுமின் நிலையத் தை நோக்கிச் சென்ற போது அவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர்.

இதனைப் பார்த்த கடற்கரையில் அமர்ந்திருந்த போராட்டக் குழுவினர், டென்சிலின் உள்பட 2 பேரை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். போலீஸ் தடுப் பை மீறி முன்னால் வர முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டும் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிடித்துச் சென்றவர்களை விடு விக்க வேண்டும் என போராட்டக் காரர்கள் கோரிக்கை விடுத்ததால், 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

பத்திரிகையாளர்கள்

மீதும் தாக்குதல்

இத்தாக்குதலின்போது காவல் துறையினர் சில பத்திரிகையாளர் களையும் தாக்கினர். ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் புகைப்பட நிருபரிடமிருந்து கேமிராவை பறித்து கடலுக்குள் வீசியெறிந்தனர்.

இதனிடையே கடலுக்குள் சென்ற போராட்டக்காரர்களை கரைக்கு வரும்படி போலீசார் அழைத்தும் அவர்கள் வர மறுத்ததுடன் அங் கிருந்த படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீ வைப்பு

இதனிடையே, போலீஸ் தடியடி யைத் தொடர்ந்து கூடங்குளம் கிரா மத்தில் பதற்றம் ஏற்பட்டது. தகவல றிந்த பொதுமக்கள் அங்கிருந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.

படகில் தப்பிய உதயகுமார்

இதனிடையே, கூடங்குளத்தில் போலீசார் தடியடி நடத்தியதும், அணு உலை எதிர்ப்புக் குழு ஒருங்கி ணைப்பாளர்கள் கடற்கரையில் தயாராக இருந்த படகில் இருந்து தப்பியோடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் போலீசார் தடியடியை நடத்தத் தொடங்கியதும் கடலோரத் தில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் கிளாஸ் படகில் ஏறி அணு உலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கள் சுப.உதயகுமார், புஷ்பராயன், மைபா மற்றும் சில நிர்வாகிகள் அங்கி ருந்து முதல் ஆளாக தப்பினர். அவர் கள் கடலுக்குள் போய் விட்டார்களா அல்லது வேறு எங்காவது சென்றார் களா என்பது குறித்துத் தெரியவில்லை. இதையடுத்து இவர்களைப் பிடிக்க கடலோரப் பகுதியில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட் டுள்ளனர்.

முதல்வர் அவசர ஆலோசனை

இந்தப்பின்னணியில் கூடங்குளத் தில் நிலைமையை கட்டுக்குள் கொண் டுவருவது பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல மைச்சர் ஜெயலலிதா அவசர ஆலோ சனை நடத்தினார் என தகவல்கள் தெரிவித்தன.

இதனிடையே, தூத்துக்குடியில் கூடங்குளம் மீனவர்களுக்கு ஆதர வாக கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (ந.நி.)

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 9வது அகில இந்திய மாநாடு பெங்களூரில் இன்று மாபெரும் பேரணி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 9வது அகில இந்திய மாநாடு  பெங்களூரில் இன்று மாபெரும் பேரணி
பெங்களூரு, செப். 10 -

இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 9வது அகில இந்திய மாநாடு கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் செப்டம்பர் 11ம்தேதி பிரம்மாண்டமான பேரணியுடன் துவங்குகிறது.

நாடு முழுவதும் 1.5 கோடி இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள, உலகின் இரண்டாவது மிகப்பெரிய இளைஞர் இயக்கமாம் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு செப்டம்பர் 11 முதல் 15ம்தேதி வரை பெங்களூரு டவுண்ஹால் அரங்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி செவ்வாயன்று பெங்களூரு ரயில்நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் பேரணி துவங்குகிறது. நிறைவில் பானப்பா பூங்காவில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தை மாநிலங்களவை உறுப்பினர் சீத்தாராம்யெச்சூரி துவக்கி வைக்கிறார். இந்தக்கூட்டத்தில் சமூகப்போராளியும் நாடறிந்த கலைஞருமான மல்லிகா சாராபாய் உரைநிகழ்த்துகிறார். வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் கேரள முன்னாள் கல்வி அமைச்சருமான எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் தபஸ் சின்கா, விடுதலைப்போராட்ட வீரர் எச்.எஸ்.தொரசாமி, வாலிபர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் முகமது சலீம், கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.ஸ்ரீராமரெட்டி, ஜி.சி. பையாரெட்டி ஆகிய தலைவர்கள் உரைநிகழ்த்துகின்றனர்.

சங்கத்தின் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற உள்ள இப்பொதுக்கூட்டத்தில் எஸ்.கண்ணன் உள்ளிட்ட அகில இந்திய நிர்வாகிகள், பி.ராஜசேகர மூர்த்தி உள்ளிட்ட கர்நாடக மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

மாநாடு

இதைத்தொடர்ந்து அன்று மாலை 5 மணியளவில் பெங்களூரு டவுண்ஹாலில் மாநாட்டுத் துவக்கவிழா நடைபெறுகிறது. வரவேற்புக்குழுத் தலைவர் டாக்டர் பரகுரு ராமச்சந்திரப்பா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

மாநாட்டைத் துவக்கி வைத்து பிரபல திரைப்பட இயக்குநர் டாக்டர் ஷியாம் பெனகல் உரையாற்றுகிறார்.

எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 12 முதல் 15 வரை பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.

கொடிமரப் பயணம்

இம்மாநாட்டை நோக்கி, சென்னையிலிருந்து கொடிமரம் கொண்டுசெல்லும் பயணம், சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சைலேந்திர காம்லே தலைமையில் புறப்பட்டது. இப்பயணக்குழுவிற்கு காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. திங்களன்று மாலை ஓசூரில் மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று காலை இப்பயணக்குழு பெங்களூரு வந்தடைகிறது.

இக்குழுவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், செய லாளர் ஆர்.வேல்முருகன், பொருளாளர் எஸ்.பாலா, துணைத் தலைவர் இல.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து, வாலிபர் சங்கத்தின் 10லட்சத்து 53 ஆயிரம் உறுப்பினர்களது பிரதிநிதிகளாக 45 பேர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

Monday, September 3, 2012

ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,செப்ட-3
 புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி மாதர், வாலிபர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதந்திரபொன்விழா நகரில் உள்ள குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமாக உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகாளாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்தும்,உடனடியாக 38  அடுக்கு மாடி குடியிப்புகளுக்கு புதியமின் இணைப்பு வழங்ககோரி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் சுமதி,டிஒய்எப்ஐ உழவர்கரை நகரகமிட்டி தலைவர் பாஸ்கர், முன்னால் பிரதேச பொருளாளர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் வாலிபர் சங்க நிர்வாகிகள் அழகப்பன்,அன்துவான்,பிரதாப்,அருள் ,மற்றும் கசாப்புகாரன் தோட்டத்தில் குடியிருக்கும் மக்கள் உள்ளிட்ட மாதர்சங்கங்களை சேர்ந்த பெண்கள் திரளானோர் போராட்டத்தல் பங்கேற்றனர்.இறுதியாக உதவி பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.