புதுச்சேரி,செப்ட-3 புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி மாதர், வாலிபர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுதந்திரபொன்விழா நகரில் உள்ள குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமாக உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகாளாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்தும்,உடனடியாக 38 அடுக்கு மாடி குடியிப்புகளுக்கு புதியமின் இணைப்பு வழங்ககோரி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் சுமதி,டிஒய்எப்ஐ உழவர்கரை நகரகமிட்டி தலைவர் பாஸ்கர், முன்னால் பிரதேச பொருளாளர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் வாலிபர் சங்க நிர்வாகிகள் அழகப்பன்,அன்துவான்,பிரதாப்,அருள் ,மற்றும் கசாப்புகாரன் தோட்டத்தில் குடியிருக்கும் மக்கள் உள்ளிட்ட மாதர்சங்கங்களை சேர்ந்த பெண்கள் திரளானோர் போராட்டத்தல் பங்கேற்றனர்.இறுதியாக உதவி பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. |
Monday, September 3, 2012
ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment