கூடங்குளத்தில் போலீஸ் தாக்குதல் |
திருநெல்வேலி, செப். 10 -
நெல்லை மாவட்டம் கூடங்குளத் தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி கடற்கரை பகுதிகளில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்திவந்த நிலையில் அவர்களை கலைக்க போலீசார் திங்களன்று தடியடி நடத்தி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாக கூடங்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந் தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதையொட்டி திருச்செந்தூர் அருகே காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில்மீனவர் ஒருவர் பலியானார். கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே, அணு உலை எதிர்ப்பாளர் கள் திங்களன்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்த நிலை யில், முற்றுகையை கைவிடுமாறு காவல்துறை கண்காணிப்பாளர் விஜ யேந்திர பிதாரி கேட்டுக் கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் முற்றுகையை கை விட மறுப்பு தெரிவித்தனர். அந்தநேரத்தில் போராட்டக் குழுவை சேர்ந்த 7 பேர் 2 படகுகளில் கடல்வழியாக சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்பகுதி யில்,அணுமின் நிலைய சுற்றுச் சுவருக்கு அருகில் இறங்கினர். இத னை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்கச் சென்ற போது, அவர்கள் தாங்கள் வந்த படகில் ஏறி திரும்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற இடிந்த கரையை சேர்ந்த டென்சிலின் (வயது 45) உள்பட 2 பேர், போலீசாரின் தடுப்பை மீறி அணுமின் நிலையத் தை நோக்கிச் சென்ற போது அவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர். இதனைப் பார்த்த கடற்கரையில் அமர்ந்திருந்த போராட்டக் குழுவினர், டென்சிலின் உள்பட 2 பேரை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். போலீஸ் தடுப் பை மீறி முன்னால் வர முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டும் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிடித்துச் சென்றவர்களை விடு விக்க வேண்டும் என போராட்டக் காரர்கள் கோரிக்கை விடுத்ததால், 2 பேரையும் போலீசார் விடுவித்தனர். பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் இத்தாக்குதலின்போது காவல் துறையினர் சில பத்திரிகையாளர் களையும் தாக்கினர். ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் புகைப்பட நிருபரிடமிருந்து கேமிராவை பறித்து கடலுக்குள் வீசியெறிந்தனர். இதனிடையே கடலுக்குள் சென்ற போராட்டக்காரர்களை கரைக்கு வரும்படி போலீசார் அழைத்தும் அவர்கள் வர மறுத்ததுடன் அங் கிருந்த படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தீ வைப்பு இதனிடையே, போலீஸ் தடியடி யைத் தொடர்ந்து கூடங்குளம் கிரா மத்தில் பதற்றம் ஏற்பட்டது. தகவல றிந்த பொதுமக்கள் அங்கிருந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. படகில் தப்பிய உதயகுமார் இதனிடையே, கூடங்குளத்தில் போலீசார் தடியடி நடத்தியதும், அணு உலை எதிர்ப்புக் குழு ஒருங்கி ணைப்பாளர்கள் கடற்கரையில் தயாராக இருந்த படகில் இருந்து தப்பியோடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போலீசார் தடியடியை நடத்தத் தொடங்கியதும் கடலோரத் தில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் கிளாஸ் படகில் ஏறி அணு உலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கள் சுப.உதயகுமார், புஷ்பராயன், மைபா மற்றும் சில நிர்வாகிகள் அங்கி ருந்து முதல் ஆளாக தப்பினர். அவர் கள் கடலுக்குள் போய் விட்டார்களா அல்லது வேறு எங்காவது சென்றார் களா என்பது குறித்துத் தெரியவில்லை. இதையடுத்து இவர்களைப் பிடிக்க கடலோரப் பகுதியில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட் டுள்ளனர். முதல்வர் அவசர ஆலோசனை இந்தப்பின்னணியில் கூடங்குளத் தில் நிலைமையை கட்டுக்குள் கொண் டுவருவது பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல மைச்சர் ஜெயலலிதா அவசர ஆலோ சனை நடத்தினார் என தகவல்கள் தெரிவித்தன. இதனிடையே, தூத்துக்குடியில் கூடங்குளம் மீனவர்களுக்கு ஆதர வாக கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (ந.நி.) |
Monday, September 10, 2012
கூடங்குளத்தில் போலீஸ் தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment