Sunday, April 28, 2013

வாலிபர் சங்க மாநில மாநாட்டை விலக்கி புதுச்சேரியில் ஆட்டோ பிரச்சாரம்

புதுச்சேரி,ஏப்-28
வாலிபர் சங்க மாநில மாநாட்டை விலக்கி புதுச்சேரியில் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 14வது தமிழ்மாநில மாநாடு மே மாதம் 9 ஆம் தேதி துவங்கி  12ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெறுகிறது.இம்மாநாட்டையொட்டி புதுச்சேரில் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது.இப்பிரச்சாரத்திற்கு டிஒய்எப்ஐ நகரகமிட்டி துணை தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்க புதுவை பிரதேச தலைவர் இரா.சரவணன்,நகரகமிட்டி தலைவர் அழகப்பன், துணை செயலாளர் நாகமுத்து,மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் மாநாட்டை விலக்கி பேசினார்கள்.புதுச்சேரி அண்ணாசிலையிலிருந்து துவங்கிய ஆட்டோ பிரச்சாரம் காமராஜர் சிலை,செஞ்சிசாலை,அஐந்தா சிக்னல்,டி.பி தோட்டம் ,முத்தியால்பேட்டை மணிகூண்டு,சோலைநகர் சமூதாய நலக்கூடம் ஆகிய பகுதியில் நடைபெற்றது.

UDC / LDC பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்கக்கோரி

புதுச்சேரி,ஏப்-27
யூடிசி,எல்டிசி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்கக்கோரி புதுச்சேரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு துறைகளில் காலியாக உள்ள  150யூடிசி பணியிடங்களுக்கும், 400எல்டிசி பணியிடங்களுக்கும் கடந்த  2012 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசால் நடத்திய தேர்வு  மூலம் தேர்ச்சி பெற்றனர்.நீதிமன்ற உத்தரவை காட்டி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இதுநாள் வரை பணி நியமன உத்தரவு வழங்காததை  கண்டித்தும்,உடணடியாக பணி ஆணை வழங்கக்கோரி இப்போராட்டம் நடைப்பெற்றது.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் பெற்றோர் ஒருங்கினைப்புக்குழுவின் கண்வீனர் தா.முருகன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் யூடிசி பணிக்கு தேர்வானவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Friday, April 26, 2013

மாணவர்களை இடைநீக்கம் செய்த பிரிஸ்ட் பல்கலைகழகம் முற்றுகை.

புதுச்சேரி,ஏப்-25
மாணவர்களை இடைநீக்கம் செய்த பிரிஸ்ட் பல்கலைகழகம்  முற்றுகை.
புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்துள்ள அபிஷேகப்பாக்கத்தில் இயங்கிவருகிறது பிரிஸ்ட் பல்கலைகழகம்.இப்பல்கலைகழகத்தில் புதுச்சேரி அரசின் சென்டாக் மூலம் தேர்வான வில்லியனூரை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை பல்கலைகழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.சென்டாக்கில் தேர்வான மாணவர்கள் அரசு வழங்கும்  நிதியை தனியார் கல்லூரிகளுக்கு செலுத்தாததால் செய்முறை தேர்வுகளுக்கு மாணவர்களை பிரிஸ்ட் பல்கலைகழகம் அனுமதியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.எனவே சென்டாக் மாணவர்கள் மாநில முதல்வரை சந்தித்து அரசு நிதி வழங்காததால் எங்களை தேர்வு எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று முறையிட்டனர்.மாநில முதல்வர் ரங்கசாமி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் இத்தகைய நடவடிக்கை மேற்கொன்டால் கடுமையாக நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று எச்சரித்து இருந்தார்.இதற்கு காரணமான பிரிஸ்ட் பல்கலைகழக மாணவர்கள் மூன்று பேரை  நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

கொலை மிரட்டல்
இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர்ஆனந்து,டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சரவணன்,பொருளாளர் கதிரவன் ஆகியோர் தலைமையில் அபிஷேகப்பாக்கம் சென்று பிரிஸ்ட் பல்கலைகழக நிர்வாகத்திடம் நியாயம் கேட்டனர்.அப்போது பிரிஸ்ட் நிர்வாகத்தினர் அடியாட்களை வைத்து மாணவர்களை மிரட்டியதோடு,மாணவர்,வாலிபர் சங்க தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது.

முற்றுகை
பிரிஸ்ட் பல்கலைகழகத்தின் அராஜகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியோர் சார்பில் வியாழனன்று (ஏப்-25) அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள பிரிஸ்ட் யூனிவர்சிட்டியின் கிளை அலுவலகத்தின் நிர்வாக இயக்குநரை முற்றுகையிட்டு இப்போராட்டம் நடைபெற்றது.எஸ்எப்ஐ பிரதேச தலைவர் அரிகரன்,செயலாளர் ஆனந்து,துணை தலைவர் ரஞ்சித்,டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் கதிரவன்,மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ் உள்ளிட்ட மாணவர் வாலிபர்கள் திரளானோர் சென்று பாதிக்கப்ட்ட மாணவர்களை உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் அரையை முற்றுகையிட்டு  போராட்டம் நடைபெற்றது.

கல்லூரி நிர்வாகம் பணிந்தது
பிரிஸ்ட் யூனிவர்சிட்டியின் டீன் தனஸ்கோடி,நிர்வாக இயக்குநர் நந்தகுமார் ஆகியோர் மாணவர்,வாலிபர் சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று கொண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கும்,மாணவர்களோடு எந்தவித விசாரணையாக இருந்தாலும் புதுச்சேரியிலேயே நடத்தப்படும்.சங்கத்தின் தலைவர்களை அவமதித்து பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

முன்னதாக பெரியார் சிலை எதிரில் இருந்து மாணவர்கள்,வாலிபர்கள் ஊர்வலமாக வந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தையோட்டி அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Sunday, April 21, 2013

புதிய நூலகத்தை திறந்த வாலிபர் சங்கம்


Add caption




செஞ்சிசாலை மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்தும் கையெழுத்து இயக்கம்

செஞ்சிசாலை மார்க்கெட் வியாபாரிகள் மற்றும்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்தும் கையெழுத்து இயக்கம்


செஞ்சி சாலை மார்க்கெட் வியாபாரிகள். தற்பொழுது கடும் வெயிலில் வாடி, வதைந்து தெரு ஓரத்தில் வியாபாரம் செய்து பிழைத்து வருகின்றனர் . அவர்களுக்காக 1.12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மார்க்கெட் வளாகம் பல நாட்களாகியும், இதுவரை பூட்டிய நிலையிலேயே உள்ளது. பலமுறை திறப்பதாக கூறி கடைசியாக ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று புதுச்சேரி நகராட்சி கூறியது ,ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. செஞ்சிசாலை மார்க்கெட் வியாபாரிகள் வியாபாரம் செய்யும் கீரை, மீன், காய்கறிகள், பூ அனைத்தும் வெயிலில் 3 மணி நேரத்திலேயே அதன் தன்மையை இழந்து வீணாக நேரிடுகிறது. வியாபாரிகள் வெளியில் அவதிப்பட்டு வருகிகின்றனர். இதில் புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது .

Wednesday, April 17, 2013

அதிகாரியை தாம்பூல தட்டு வைத்து அழைக்கும் நூதன போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது



புதுச்சேரி,ஏப்-16
அதிகாரியை தாம்பூல தட்டு வைத்து அழைக்கும்  நூதன போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுக்கு உட்பட்ட பொய்யாகுளம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கழிவரை கட்டி கொடுக்க வேண்டும்.சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை அப்புரபடுத்த வேண்டும்   என்பன நீண்ட நாட்களாக உள்ள இக் கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் கரை நகராட்சி ஆணையரை தாம்பூலதட்டு வைத்து அழைக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பூமியான் பேட்டையில் உள்ள உழவர்கரை நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொய்யாகுளம் கிளை தலைவர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் இரா.சரவணன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் என்.பிரபுராஜ் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.உழவர்கரை நகர தலைவர் பி.அந்துவான்,செயலாளர் முரளி,நகரகமிட்டி செயலாளர் அழகப்பன்,துணை தலைவர் நாகமுத்து,பொய்யாகுளம் பகுதி பெண்கள்,வாலிபர்கள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆணையர் அலுவலம் முற்றுகை
முன்னதாக தட்டாஞ்சாவடி கொக்குபார்க் அருகில் இருந்து துவங்கிய ஊர்வலம் உழவர்கரை நகராட்சி அலுவலகம் வரை தாம்பூலதட்டுடன் கோரிக்கைகளை முழங்கியவாறு வந்தனர்.பின்னர் நகராட்சி ஆணையரை சந்திக்க வெத்தலை பாக்கு,பூ,பழம் அடங்கிய  தாம்பூல தட்டுடன் சென்றனர்.நகராட்சி ஆணையர் அங்கு இல்லாததால் அங்கேயே  அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கமிட்டனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் பொய்யாகுலம் பகுதிக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினார்கள் இன்னும் ஒரு மாதத்தில் இக்கோரிக்கைகளை  நிறைவேற்றி தருவதாக வாலிபர் சங்க தலைவர்களிடம் உறுதி அளித்தனர்.அதிகாரிகளின் உறுதி மொழியை ஏற்று இப்போராட்டம் தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்தனர். 

Wednesday, April 10, 2013

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 13வது மாநாடு

புதுச்சேரி,ஏப்-8
வேலையின்மையை விரட்டி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு டிஒய்எப்ஐ மாநாடு வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 13வது மாநாடு வினோதினி திவ்யா நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.மாநட்டு கொடியை சங்கத்தின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன் ஏற்றி வைத்து துவங்கிய, மாநாட்டுக்கு பிரதேசக்குழு உறுப்பினர் அரிதாஸ் தலைமை தாங்கினார்.முன்னதாக மாநாட்டு பிரதிநிதிகளை வரவேற்று பிரதேச தலைவர் சந்துரு பேசினார்.வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில துணை தலைவர் என்.எஸ்.அசோகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.பிரதேச செயலாளர் ப.சரவணன் வேலை அறிக்கையை தாக்கல் செய்தார்.இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து மாநாட்டை வாழ்த்தி பேசினார்.இருதியாக சங்கத்தின் தமிழ்மாநில துணை செயலாளர் ச.லெனின் மாநாட்டை நிறைவு செய்தும் எதிர்கால கடமைகளை பற்றி பேசினார்.

புதிய நிர்வாகிகள்
ஏப்ரல் 6ல் சிங்காரவேலர் சதுக்கத்தில் இருந்து ஊர்வலமாக துவங்கிய வாலிபர் சங்க பேரணியை மார்க்சி
ஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் அண்ணாசாலை வைசியாள்வீதி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இம்மாநாட்டில் வாலிபர் சங்கத்தின் புதிய பிரதேச தலைவராக ஆர்.சரவணன்,செயலாளராக ப.சரவணன்,பொருளாளராக து.கதிரவன்,துணை தலைவர்களாக பா°கர்,தட்சணாமூர்த்தி,துணை செயலாளர்களாக அரிதாஸ்,சண்முகம் உள்ளிட்ட 20பேர் கொண்ட புதிய பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் மே மாதம் நாகர்கோவில் நடைபெறும் மாநில மாநாட்டு பிரதிநிதியாக ஒரு பெண் உட்பட 5பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மாணங்கள்.
புதுச்சேரி பிரதேசத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 2.30லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை மாநில என்.ஆர்.காங்கிரஸ் அரசு உருவாக்க வேண்டும்.

பாரதி,சுதேசி,ஏ.எப்.டி பஞ்சாலைகளை புனரமைத்து நவீன இயந்திரங்கள் மூலம் ஜவுளிபூங்கா ஏற்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.மத்திய அரசின் திட்டமான ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

அணைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Friday, April 5, 2013

இந்திய மாணவர் சங்க தலைவர் சுதிப்தாகுப்தா படுகொலை கண்டித்து புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்க தலைவர் சுதிப்தாகுப்தா வயது 23 இவர் மேற்குவங்க மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். காவல்துறையின் தாக்குதலால் செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இத்தகைய மம்தா பனார்ஜி அரசின் அடக்குமுறையை
கண்டித்து புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.அவர்களை போலீஸார் கைது செய்தனர்