புதுச்சேரி,ஏப்-25
மாணவர்களை இடைநீக்கம் செய்த பிரிஸ்ட் பல்கலைகழகம் முற்றுகை.
புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்துள்ள அபிஷேகப்பாக்கத்தில் இயங்கிவருகிறது பிரிஸ்ட் பல்கலைகழகம்.இப்பல்கலைகழகத்தில் புதுச்சேரி அரசின் சென்டாக் மூலம் தேர்வான வில்லியனூரை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை பல்கலைகழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.சென்டாக்கில் தேர்வான மாணவர்கள் அரசு வழங்கும் நிதியை தனியார் கல்லூரிகளுக்கு செலுத்தாததால் செய்முறை தேர்வுகளுக்கு மாணவர்களை பிரிஸ்ட் பல்கலைகழகம் அனுமதியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.எனவே சென்டாக் மாணவர்கள் மாநில முதல்வரை சந்தித்து அரசு நிதி வழங்காததால் எங்களை தேர்வு எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று முறையிட்டனர்.மாநில முதல்வர் ரங்கசாமி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் இத்தகைய நடவடிக்கை மேற்கொன்டால் கடுமையாக நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று எச்சரித்து இருந்தார்.இதற்கு காரணமான பிரிஸ்ட் பல்கலைகழக மாணவர்கள் மூன்று பேரை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.
கொலை மிரட்டல்
இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர்ஆனந்து,டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சரவணன்,பொருளாளர் கதிரவன் ஆகியோர் தலைமையில் அபிஷேகப்பாக்கம் சென்று பிரிஸ்ட் பல்கலைகழக நிர்வாகத்திடம் நியாயம் கேட்டனர்.அப்போது பிரிஸ்ட் நிர்வாகத்தினர் அடியாட்களை வைத்து மாணவர்களை மிரட்டியதோடு,மாணவர்,வாலிபர் சங்க தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது.
முற்றுகை
பிரிஸ்ட் பல்கலைகழகத்தின் அராஜகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியோர் சார்பில் வியாழனன்று (ஏப்-25) அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள பிரிஸ்ட் யூனிவர்சிட்டியின் கிளை அலுவலகத்தின் நிர்வாக இயக்குநரை முற்றுகையிட்டு இப்போராட்டம் நடைபெற்றது.எஸ்எப்ஐ பிரதேச தலைவர் அரிகரன்,செயலாளர் ஆனந்து,துணை தலைவர் ரஞ்சித்,டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் கதிரவன்,மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ் உள்ளிட்ட மாணவர் வாலிபர்கள் திரளானோர் சென்று பாதிக்கப்ட்ட மாணவர்களை உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் அரையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
கல்லூரி நிர்வாகம் பணிந்தது
பிரிஸ்ட் யூனிவர்சிட்டியின் டீன் தனஸ்கோடி,நிர்வாக இயக்குநர் நந்தகுமார் ஆகியோர் மாணவர்,வாலிபர் சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று கொண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கும்,மாணவர்களோடு எந்தவித விசாரணையாக இருந்தாலும் புதுச்சேரியிலேயே நடத்தப்படும்.சங்கத்தின் தலைவர்களை அவமதித்து பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக பெரியார் சிலை எதிரில் இருந்து மாணவர்கள்,வாலிபர்கள் ஊர்வலமாக வந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தையோட்டி அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment