Wednesday, April 10, 2013

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 13வது மாநாடு

புதுச்சேரி,ஏப்-8
வேலையின்மையை விரட்டி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு டிஒய்எப்ஐ மாநாடு வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 13வது மாநாடு வினோதினி திவ்யா நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.மாநட்டு கொடியை சங்கத்தின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன் ஏற்றி வைத்து துவங்கிய, மாநாட்டுக்கு பிரதேசக்குழு உறுப்பினர் அரிதாஸ் தலைமை தாங்கினார்.முன்னதாக மாநாட்டு பிரதிநிதிகளை வரவேற்று பிரதேச தலைவர் சந்துரு பேசினார்.வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில துணை தலைவர் என்.எஸ்.அசோகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.பிரதேச செயலாளர் ப.சரவணன் வேலை அறிக்கையை தாக்கல் செய்தார்.இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து மாநாட்டை வாழ்த்தி பேசினார்.இருதியாக சங்கத்தின் தமிழ்மாநில துணை செயலாளர் ச.லெனின் மாநாட்டை நிறைவு செய்தும் எதிர்கால கடமைகளை பற்றி பேசினார்.

புதிய நிர்வாகிகள்
ஏப்ரல் 6ல் சிங்காரவேலர் சதுக்கத்தில் இருந்து ஊர்வலமாக துவங்கிய வாலிபர் சங்க பேரணியை மார்க்சி
ஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் அண்ணாசாலை வைசியாள்வீதி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இம்மாநாட்டில் வாலிபர் சங்கத்தின் புதிய பிரதேச தலைவராக ஆர்.சரவணன்,செயலாளராக ப.சரவணன்,பொருளாளராக து.கதிரவன்,துணை தலைவர்களாக பா°கர்,தட்சணாமூர்த்தி,துணை செயலாளர்களாக அரிதாஸ்,சண்முகம் உள்ளிட்ட 20பேர் கொண்ட புதிய பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் மே மாதம் நாகர்கோவில் நடைபெறும் மாநில மாநாட்டு பிரதிநிதியாக ஒரு பெண் உட்பட 5பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மாணங்கள்.
புதுச்சேரி பிரதேசத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 2.30லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை மாநில என்.ஆர்.காங்கிரஸ் அரசு உருவாக்க வேண்டும்.

பாரதி,சுதேசி,ஏ.எப்.டி பஞ்சாலைகளை புனரமைத்து நவீன இயந்திரங்கள் மூலம் ஜவுளிபூங்கா ஏற்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.மத்திய அரசின் திட்டமான ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

அணைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment