புதுச்சேரி,மே-5
செஞ்சிசாலை அங்காடி திறப்புவிழா செலவிற்கு பிச்சை எடுத்த வாலிபர்களை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்தனர்.
நீண்ட நாட்களாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதுச்சேரி செஞ்சி சாலை அங்காடியின் திறப்பு விழாவை நடத்த புதுச்சேரி நகராட்சியிடம் நிதியில்லையாம்.எனவே திறப்புவிழா செலவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கடைவியாபரிகளிடம் பிச்சை எடுத்து நகராட்சியிடம் நிதி செலுத்தப்படும் என அறிவித்திருந்தனர்.அதன்படி ஞாயிற்றுக்கிழமை டிஒய்எப்ஐ நகரகமிட்டி சார்பில் செஞ்சிசாலை வியாபரிகளிடமும்,பொதுமக்களிடமும் பிச்சை எடுத்த வாலிபர்களை காவல்துறையினர் வலுகட்டாயமாக கைது செய்தனர்.
இப்போராட்டத்திற்கு டிஒய்எப்ஐ நகரகமிட்டி செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க பிரதேச தலைவர் இரா.சரவணன் பிச்சை எடுக்கும் போராட்டத்தை துவக்கி வைத்தார்.உழவர்கரை நகரக்குழு தலைவர் அன்துவான்,செயலாளர் முரளி,கமிட்டி நிர்வாகிகள் பிரதாப்,நகாமுத்து,சத்தியசீலன்,யோகராஜ்,தமிழ்,மினிலோடு கேரியர் ஒட்டுநர் சங்க செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.இப்போராட்டத்தால் அப்பகுதியில் பெறும்பரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment