Wednesday, May 15, 2013

வாலிபர் சங்கம் போராட்டத்திற்கு பிறகு செஞ்சிசாலை அங்காடி திறப்புவிழா நடைபெற்றது.

புதுச்சேரி,மே-15
வாலிபர் சங்கம் போராட்டத்திற்கு பிறகு செஞ்சிசாலை அங்காடி திறப்புவிழா நடைபெற்றது.

அங்காடி திறப்பு விழா புதுச்சேரி நகராட்சி சார்பில் புதனன்று மே-15 நடைபெற்றது.புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அங்காடியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இவ்விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம்,அரசு செயலர் ஸ்ரீகாந்த்,உள்ளாட்சி துறை இயக்குநர் ரவிபிரகாஷ்,இணை திட்ட இயக்குநர் சுமிதா,நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் மற்றும் மீனவ பெண்கள் மற்றும் காய்கறி வியபாரிகள் திரளாக பங்கேற்றனர்.

ரி செஞ்சி சாலை மீன் மற்றும் காய்கறி அங்காடி ரூ 90லட்சம் செலவில் கட்டப்பட்டது.நீண்ட நாட்களாக கட்டி முடிக்கப்பட்ட அங்காடியை திறக்க வேண்டும் என்று இந்திய ஜனநயாக வாலிபர் சங்கத்தின் நகரகமிட்டி சார்பில் வியாபரிகளிடமும்,பொதுமக்களிடமும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.மேலும் இம்மாதம் மே 5ஆம்தேதி திறப்பு விழாவிற்காக நூதன முறையில் வாலிபர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தையும் நடத்தினர்.

டிஒய்எப்ஐ  க்கு  பாராட்டு
தொடர்ந்து செஞ்சிசாலை அங்காடியை திறக்ககோரி பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்திய டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் இரா.சரவணன்,நகரகமிட்டி செயலாளர் அழகப்பன்,கமிட்டி நிர்வாகிகள் பிரதாப்,நாகமுத்து,தமிழரசன்,உழவர்கரை கமட்டி தலைவர் அந்துவான் ஆகியோரை அங்காடி திறப்பு விழாவிற்கு அழைத்த மீனவபெண்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.மேலும் வாலிபர் சங்கத்திற்கு தங்களது ஆதரவு என்றென்றும் தொடரும் என்றும் தங்கள் வீட்டு பிள்ளைகளையும் இவ்வியக்கத்திற்கு அனுப்பி வைப்பதாகவும்  உறுதியளித்தனர்.

No comments:

Post a Comment