Monday, June 3, 2013

வாலிபர் சங்கத்தின் புதிய கிளை உதயம்.


புதுச்சேரி,ஜுன்-2
வாலிபர் சங்கத்தின் புதிய கிளை உதயம்.

புதுச்சேரி முத்தியாள்பேட்டை  மஞ்சினி நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்புவிழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு நகரகமிட்டி செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கினார்.துணை தலைவர் பிரதாப் முன்னிலை வகித்தார்.சிஐடியு கேரியர் சங்க செயலாளர் மதிவாணன் சங்கத்தின் புதிய பெயர்பலகையை திறந்து வைத்தார்.சிஐடியு  மாவட்ட துணை தலைவர் ராஜாங்கம் வாலிபர்களின் சமூக பணி குறித்து கருத்துரை வழங்கினார்.டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் ஆர்.சரவணன் சங்கத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார்.நகரகமிட்டியின் இணை செயலாளர் நாகமுத்து, கிளையின் தலைவர் அஜித்,செயலாளர் சூர்யா,பொருளாளர் கோபி உள்ளிட்ட திரளான வாலிபர்கள்,பொதுமக்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக அப்பகுதியில்  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 479 மதிப்பெண்கள் பெற்ற மார்டினா என்ற மாணவியை வாழ்த்தி கதராடை அணிவித்து நினைவு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment