Tuesday, December 17, 2013

டெல்லி மாணவி படுகொலைசெய்யப்பட்ட தினத்தில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,டிச.17-
டெல்லி மாணவி படுகொலைசெய்யப்பட்ட தினத்தில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளி ,கல்லூரிகள் மற்றும் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் புகார்குழுக்களை அமைக்க வேண்டும்.புதுச்சேரியில் பெண்கள் ஆனையத்தை செயல்படுத்த வேண்டும்.பெண்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் கடந்தாண்டு ஓடும் பேரூந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்டடு  படுகொலை செய்யப்பட்ட மாணவியின் முதலாம் ஆண்டைமுன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணை தலைவர் சுமதி,இந்திய ஐனநாயக வாலிபர் சங்க பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் கதிரவன்,மாணவர் சங்க பிரதேச தலைவர் அருண்,துணைத்தலைவர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.இப்போராட்டத்தில் திரளான வாலிபர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment