Thursday, January 30, 2014

சாதி மத மோதலை எதிர்த்து புதுச்சேரியில் வாலிபர்கள் மாணவர்கள் சைக்கிள் பிரச்சாரம்

புதுச்சேரி,ஜன.30-

                        சாதி மத மோதலை எதிர்த்து புதுச்சேரியில்
வாலிபர்கள் மாணவர்கள் சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது.

                     புதுச்சேரியில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.சாதி மத மோதலை தடுத்திட வேண்டும்.போதை வன்முறை கலாச்சாராத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க வேண்டும்.பெண்கள் மீதான வன்முறையை தாக்குதலை தடுக்க போதுமான  நடவடிக்கையை  எடுக்க வேண்டும்.கல்வி வியாபாரத்தை மாநில அரசு தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  இலாஸ்பேட்டை,மதடிப்பட்டு,கரையாம்பத்தூர்,கரியமாணிக்கம் ஆகிய நான்கு மையங்களில் இருந்து இப்பிரச்சாரம் துவங்கப்பட்டது.

லாஸ்பேட்டை 
                                                             இலாஸ்பேட்டை நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை எதிரே துவங்கிய இப்பிரச்சாரத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்க முன்னால் செயலாளர் லெனின்துரை சைக்கிள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.முன்னால் பொருளாளர் பிரபுராஜ் வாழ்த்தி பேசினார்.நிர்வாகிகள் பாஸ்கர்,அழகப்பன்,ஜீவாரஞ்சித் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மதகடிப்பட்டு
                                      மதகடிப்பட்டில் துவங்கிய சைக்கிள் பிரச்சாரத்திற்கு மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,வாலிபர் சங்க பிரதேச துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்.  நிர்வகிகள் கார்க்கி,கவியரசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
கரையாம்பத்தூர்

                                    பாகூர் கொம்யூன் கரையாம்பத்தூரில் துவங்கிய பிரச்சாரத்திற்கு டிஒய்எப்ஜ பிரதேச செயலாளர் பி.சரவணன்,எஸ்எப்ஐ நிர்வாகி ஜெயராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.பிரச்சாரத்தை வாலிபர் சங்கத்தின் முன்னால் செயலாளர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.நிர்வாகிகள் அரிதாஸ்,பிரவீன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
                            
கரியமாணிக்கம்
                                                           கரியமாணிக்கம் நான்கு முனைச்சந்திப்பில் துவங்கிய பிரச்சாரத்திற்கு டிஒய்எப்ஐ பொருளாளர் டி.கதிரவன்,மாணவர் சங்க பிரதேச தலைவர் அருண்குமார்  ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.நிர்வாகிகள் சண்முகம்,திவானந்து உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மணவர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

நான்கு முனையில் இருந்து துவங்கிய சைக்கிள் பிரச்சாரம் இறுதியாக மாலையில் ,புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரே அனைவரும்  சங்கமித்தனர்.பின்னர் அங்கு சாதி மத மோதலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு நிகழ்சி நடைபெற்றது.இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு சைக்கிள் பிரச்சாரத்தை முடித்து வைத்து பேசினார்.

Friday, January 17, 2014

ஆரம்ப சுகாதாரநிலையத்தில் புதர் போல்கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் புதர் போல்கிடந்த குப்பைகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

இலாஸ்பேட்டை பொங்கள் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

இந்திய மாணவர் சங்கமும்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்
இலாஸ்பேட்டை அசோக்நகரில் ற  நான்காம் ஆண்டு பொங்கள் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் மாவட்ட நீதிபதி மேரி அன்செலம் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், அப்பகுதி பெண்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை ,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,வாலிபர் சங்கத்தின் பிரதேச  தலைவர் இரா.சரவணன்,துணைத்தலைவர் பாஸ்கர், பொருளாளர் கதிரவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.இவ்விழாவில் அப்பகுதியை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

முத்தியால்பேட்டை விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

முத்தியால்பேட்டை வ.ஊ.சி நகரில் நடைபெற்ற விளையாட்டுபோட்டி பரிசளிப்பு விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் கிளை நிர்வாகி மணிகண்டன் தலைமை தாங்கினார்.வாலிபர்கள் நவீன், ராஜசூர்யா,சந்துரு,பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,சிஐடியூ துணைத்தலைவர் ராஜாங்கம்,வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன்,முன்னால் பொருளாளர் பிரபுராஜ் , துணைத்தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று ஓட்டபந்தயம்,உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்ளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.இவ்விழாவில் அப்பகுதியைசேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

Monday, January 6, 2014

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுவையில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.


சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுவையில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
சிலிண்டர் விலை உயர்வு காரணமாக மக்கள் விறகுகளை பயன்படுத்தி சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக விறகுகளை மூட்டி மண்சட்டியில் சமையல் செய்யும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகரச் செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கச் செயலாளர் ஆனந்த் கண்டன உரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, January 1, 2014

போதை எதிர்ப்பு உறுதிமொழி - 2014

புத்தாண்டு தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி முத்தியாள்பேட்டை வ.ஊ.சி நகர் கிளையின் சார்பில்
போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்சி நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன், நகர துணை தலைவர் நாகமுத்து ,கிளைநிர்வாகிகள் நவீன்,அருண் , பிரபாகரன் ,ஷண்முகவேல்  உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த திரளான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.