முத்தியால்பேட்டை வ.ஊ.சி நகரில் நடைபெற்ற விளையாட்டுபோட்டி பரிசளிப்பு விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் கிளை நிர்வாகி மணிகண்டன் தலைமை தாங்கினார்.வாலிபர்கள் நவீன், ராஜசூர்யா,சந்துரு,பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,சிஐடியூ துணைத்தலைவர் ராஜாங்கம்,வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன்,முன்னால் பொருளாளர் பிரபுராஜ் , துணைத்தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று ஓட்டபந்தயம்,உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்ளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.இவ்விழாவில் அப்பகுதியைசேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment