Thursday, May 29, 2014

கட்டாய கல்விஉரிமை சட்டத்தை அமல்படுத்தகோரி கல்வித்துறை இயக்குனரை முற்றுகையிட்டு போராட்டம்.

புதுச்சேரி,மே.29-
கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தகோரி  கல்வித்துறை இயக்குனரை முற்றுகையிட்டு போராட்டம்.




தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2010  கீழ் ஏழைஎளிய மாணவர்களுக்கு 25விழுக்காடு அரசு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடையை தடுத்து நிறுத்தி,கட்டணங்களை முறைபடுத்த உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் நடப்பாண்டே கட்டண நிர்ணய குழுவை அமைத்திட வேண்டும்.புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் அமைத்திட வேண்டும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் எதிரில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித்,வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் பி.சரவணன் மற்றும் நிர்வாகிகள் பா°கர்,ஜெயராஜ்,சத்தியா,ஜெயலட்சுமி உள்ளிட்ட திரளான மாணவர்கள் வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

இயக்குனர் உறுதி


கல்விதுறை இயக்குனர் வல்லவனை முற்றுகையிட்ட மாணவர்களிடம் தனியார் பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25விழுக்காடு இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் முற்றுகை போராட்டம் கைவிட்டனர்.மாணவர்கள்,வாலிபர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment