Wednesday, June 4, 2014

பாகூர் கொம்யூனில் உள்ள 130ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி

புதுச்சேரி,ஜூன்.3-
பழமை வாய்ந்த பாகூர் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க கோரி  பிரச்சாரம் நடைபெற்றது. 
 
புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூனில் உள்ள 130ஆண்டுகள் பழமை வாய்ந்த  அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியிலும்,பெண்கள் ஆரம்பள்ளியிலும் மாணவர்களை சேர்க்க கோரி விழிப்புனர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
பாகூர் காமராஜர் நகரில் துவங்கிய பிரச்சாரத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கொம்யூன் செயலாளர் ஜெயராஜ்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொம்யூன் தலைவர் அரிதாஸ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.
 
வாலிபர் சங்க பிரதேச செயலாளர் பி.சரவணன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகி வடிவேல், பெற்றோர்கள் சங்க நிர்வாகிகள் சரவணன், பெருமாள், செல்வராசு ,கவுதம் உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக பாகூர் முழுவதும் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாணவர்கள் தட்டிகளை ஏந்தியவாரு  பங்கேற்றது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

No comments:

Post a Comment