Friday, June 20, 2014

ஹைமாஸ் விளக்கு மீண்டும் எரிந்தது, D Y F I தொடர் முயற்சிக்கு வெற்றி

ஹைமாஸ் விளக்கு மீண்டும் எரிந்தது, D Y F I தொடர் முயற்சிக்கு வெற்றி

புதுச்சேரி அஜந்தா சிக்னலில் ஹைமாஸ் விளக்கு இயங்கவில்லை என்ற மனு சம்பந்தமாக இந்திய ஜனநாயக சங்க தோழர்கள் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திரு .கனகராஜ் அவர்களை மீண்டும் சந்தித்து பேசுகையில் இன்னும் 10 நிமிடத்தில் விளக்கு எரியும் என்று கூறினார் .ஹைமாஸ் விளக்கு மீண்டும் எரிந்தது . பிறகு அப்பகுதி மக்கள் வாலிபர் சங்க தோழர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Saturday, June 14, 2014

Democratic Youth Federation of India - Puducherry Pradesh Committee demands the state government for CBI Enquiry

Students' Federation of India and the Democratic Youth Federation of India - Puducherry Pradesh Committee demands the state government for CBI Enquiry in the case of prostitution mafia gang which was recently arrested and involving minor girl students in prostitution from a economically poor and in a weaker section.
 
பெறுநர்,                                                                                          13/06/2014.
உயர்திரு.முதலமைச்சர்.அவர்கள்,
புதுச்சேரி அரசு,
புதுச்சேரி.
பொருள்:- பள்ளி சிறுமிகள்பாலியல்தொழிலுக்கு உட்படுத்திய வழக்கை
                  சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துறைக்க கோருதல் தொடர்பாக.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்! புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன் விபச்சார கும்பல் ஒன்று பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இச்செய்தி புதுச்சேரியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இச்சம்பவத்தில் பல முக்கிய புள்ளிகள், பிரமுகர்கள் என பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவருகிறது. மேற்படி விபச்சார கும்பல் பெரும்பாலும் வறுமை நிலையை பயன்படுத்தியும், ஆசைகாட்டியும் மாணவிகளை இது போன்ற மிகமோசமான பாலியல் இழிதொழில் புதைகுழிக்கு பள்ளிச்சிறுமிகள் தள்ளப்படுகிறார்கள். பெண்கள் மீதான வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக புதுச்சேரி மாறி வருவது வேதனையளிப்பதாகும். சிறுமிகள் மீதான பாலியல் வழக்கில் அதில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கற்பழிப்பு, குழந்தைகள் மீதானபாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுகிறோம். இதில் சம்பந்தப்பட்ட கயவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறோம். 
• இவ்வழக்கு நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற புதுச்சேரி அரசு இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம்ஒப்படைக்கவேண்டும்.
• கேரளாவில்நடைபெற்றுவரும்சிறுமி சுரியநல்லி கற்பழிப்பு வழக்கை போன்று இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்படவேண்டும். 
• விசாகா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றம் 1996ல் வழங்கிய தீர்ப்பு மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ்
அனைத்து கல்விநிலையங்களிலும் பாலியல் புகார் குழுக்களை
அமைத்திட வேண்டும்.
• 2013ம் ஆண்டு பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மத்திய அரசால் அமைக்கப்பட்ட வர்மா குழுவின் பரிந்துரையின் படி இவ்வழக்கை விரைவு நீதிமன்றம் மூலமாக நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தாமதமின்றி கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறோம். 
•குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தை முழுமையாக செயல்படுத்த கேட்டுகொள்கிறோம்.
மேலும் பெண்கள் மீதான குடும்ப வன்முறை தடைச்சட்டம், பெண்களை இழிவுபடுத்தும் தடைச்சட்டம், வரதச்சனை தடைச்சட்டம் போன்ற பெண்கள் தொடர்பான சட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டும். பெண்கள் தொடர்பான வழக்குகளை உரிய முறையில் கையாள்வதற்கு காவல் துறையினருக்கு உரிய பயிற்சி அளித்திடவும்தங்களை கேட்டுகொள்கிறோம்.
                                            நன்றி,
இவண்,
 செயலாளர்,                                                       செயலாளர்,
 அ. ஆனந்த்                                                         ப.சரவணன் 
இந்திய மாணவர்சங்கம்(SFI).     இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம்(DYFI).

கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி மாநிலத்தில் மிகவும் முக்கியமான மக்கள் புழக்குமிடம் புதுவை புதிய பேருந்து நிலையம் இவ்விடத்தில் முன்பு இயங்கி வந்த இலவச கழிவறை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் கட்டப்படும் என்று கூறி இடிக்கப்பட்டது .

இது வரை கழிவறை கட்டப்படவில்லை வெளியூரில் இருந்து வரும் மக்கள் அவதிக்கு உள்ளாகும் நிலைமையுள்ளது . 1 பாக்கெட் தண்ணீர் விலை ரூ 2 மட்டுமே , ஆனால் அதை கழிக்க ரூ 3 செலவு வேண்டியுள்ளது என கருதி மக்களில் சிலர் மறைவாக கழிவுகளை கழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் . இதனால் சுகாதாரமான நிலையில்லா உருவாக்கப்படுகிறது.

எனவே புதுச்சேரி நகராட்சி உடனடியாக முன்பு இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டித் தருமாறு வலியுறுத்தி இன்று காலை 10 அளவில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது . இதில் பொது மக்கள் கையெழுத்து இட்டு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர் .

Wednesday, June 11, 2014

கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி மகாத்மா காந்தி வீதி அஜந்தா சிக்னல் ஹைமாஸ் விளக்கு கடந்த ஒரு மாதமாக இயங்கவில்லை. மிக நெரிசலான போக்குவரத்து பாதை வெளிச்சமில்லாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது . எனவே பொதுப்பணித்துறை உடனடியாக தலையீடுமாறு கையெழுத்து இயக்கம். இவ்வியக்கத்தில் நகர செயலர் அழகப்பன் , நகரக்குழு உறுப்பினர் பிரபாகரன் , கிளை தோழர்கள் கலந்துக்  கொண்டனர் .

Wednesday, June 4, 2014

பாகூர் கொம்யூனில் உள்ள 130ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி

புதுச்சேரி,ஜூன்.3-
பழமை வாய்ந்த பாகூர் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க கோரி  பிரச்சாரம் நடைபெற்றது. 
 
புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூனில் உள்ள 130ஆண்டுகள் பழமை வாய்ந்த  அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியிலும்,பெண்கள் ஆரம்பள்ளியிலும் மாணவர்களை சேர்க்க கோரி விழிப்புனர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
பாகூர் காமராஜர் நகரில் துவங்கிய பிரச்சாரத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கொம்யூன் செயலாளர் ஜெயராஜ்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொம்யூன் தலைவர் அரிதாஸ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.
 
வாலிபர் சங்க பிரதேச செயலாளர் பி.சரவணன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகி வடிவேல், பெற்றோர்கள் சங்க நிர்வாகிகள் சரவணன், பெருமாள், செல்வராசு ,கவுதம் உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக பாகூர் முழுவதும் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாணவர்கள் தட்டிகளை ஏந்தியவாரு  பங்கேற்றது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.