Tuesday, August 23, 2011

இந்தியாவை ஒலியமயமாக்குவோம்


உழலில் இருண்ட இந்தியாவை ஒலியமயமாக்குவோம் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி நேருவீதியில் மெழுகுவத்தி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.எல்ஜசி ஊழியர் சங்க தலைவர்களுள் ஒருவருமான ராம்ஜி கலந்து கொண்டு தீபத்தை ஏற்றி துவக்கி வைத்தார்.உடன் டிஒய்எப்ஜ பிரதேசத்தலைவர் சந்துரு,நகரத்தலைவர் சரவணன் ஆகியோர் உள்ளனர்.

Thursday, August 18, 2011

புதிய பெயர்பலகை திறப்பு விழா - சுதந்திர தினத்தை முன்னிட்டு விழா


புதுச்சேரி ஆக 16
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா பாக்குமுடையான்பேட்டையில் நடைபெற்றது.
புதுச்சேரி பாக்குமுடையான் பேட் வினோபா நகரில் நடந்த சேகுவேரா இளைஞர் நர்பணி மன்றத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழாவிற்து வாலிபர்சங்க கிளை தலைவர் அந்துவான் தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேசதலைவர் சந்துரு சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்தார்.சங்கத்தின் பெயர்பலகையை பிரதேச பொருளாளர் பிரபுராஜ் திறந்து வைத்தார்.சிறப்பு அழைப்பாளராக பிரதேச செயலாளர் தமிச்செல்வன் வாலிபர் சங்த்தின் லட்சியங்களைபற்றி பேசினார்.மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,துனைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.இவ்விழாவில் கிளை செயலாளர் லாமார்க்,பொருளாளர் கார்த்திக்,பாலமுருகன்,மணிகண்டன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்றனர். சேகுவேரா பெயரில் துவங்கப்பட்டுள்ள இளைஞர் நற்பணி மன்றம் டிஒய்எப்ஜ யுடன் இனைக்கப்பட்டுள்ளது.


சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்திசெட்பேட்டையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு டிஒய்எப்ஜ நகர தலைவர் சரவணன் பரிசுகளை வழங்கினார்.சிஜடியு உடல் உழைப்போர் சங்கத்தின் பொருளாளர் குமார்,வாலிபர் சங்க நிர்வாகி வினோத்,சங்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.




சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று


புதுச்சேரி ஆக 10
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று புதுச்சேரியில் மாணவர்கள் மேலதாலத்துடன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
புதுச்சேரி வ.ஊ.சி அரசு பள்ளி எதிரே நடந்த இந்த நிகழ்சியில் இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,துணைத்தலைவர் ரஞ்சித்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சந்துரு, மற்றும் நகரகமிட்டி தலைவர் சரவணன்,உழவர்கரை கமிட்டி செயலாளர் பாஸ்கர், சிஜடியு ஆட்டோ சங்க நிர்வாகி மது,நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகி பாலாஜி உள்ளிட்ட திரளான மாணவர்கள் உச்சநீதி மன்றத்தீர்ப்பை வரவேற்று மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். முன்னதாக மேலதாலத்துடன் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.

இதேப்போல் இலாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்,உள்ளிட்ட புதுச்சேரி முழுவதும் உள்ள கல்லுரிகளிலும்,கல்வி நிலையங்களிலும் மாணவர்சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

Tuesday, August 2, 2011

பகத்சிங் இளைஞர் நற்பணி இயக்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா ரெட்டியார் பாளையத்தில் நடைபெற்றது



புதுச்சேரி ஜூலை 17
பகத்சிங் இளைஞர் நற்பணி இயக்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா ரெட்டியார் பாளையத்தில் நடைபெற்றது.
அஜிஸ் நகரில் நடந்த இவ்விழாவிற்கு கிளைத்தலைவர் அருண்ராஜ் தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு வாலிபர் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.வாலிபர் சங்கத்தோடு இணைந்துள்ள இயக்கத்தின் புதிய பெயர் பலகையை டிஒய்எப்ஜ புதுச்சேரி பிரதேச செயலாளர் டி.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து பேசினார்.மாதர் சங்க பிரதேச செயலாளர் சத்திய,டிஒய்எப்ஜ பிரதேச பொருளாளர் என்.பிரபுராஜ்,உழவர்கரை கமிட்டி செயலாளர் பாஸ்கர்,நகரகமிட்டி தலைவர் சரவணன்,எஸ்எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து, ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கிளை செயலாளர் ரமேஷ்,பொருளாளர் வேணு ,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் விழாவில் பங்கேற்றனர்.


கும்பகோனத்து தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 7ஆம் ஆண்டு தினத்தையொட்டி புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்வி வியாபார எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு இலாஸ்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித்,ஜெயராஜ் உள்ளிட்ட மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.