Thursday, August 18, 2011
புதிய பெயர்பலகை திறப்பு விழா - சுதந்திர தினத்தை முன்னிட்டு விழா
புதுச்சேரி ஆக 16
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா பாக்குமுடையான்பேட்டையில் நடைபெற்றது.
புதுச்சேரி பாக்குமுடையான் பேட் வினோபா நகரில் நடந்த சேகுவேரா இளைஞர் நர்பணி மன்றத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழாவிற்து வாலிபர்சங்க கிளை தலைவர் அந்துவான் தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேசதலைவர் சந்துரு சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்தார்.சங்கத்தின் பெயர்பலகையை பிரதேச பொருளாளர் பிரபுராஜ் திறந்து வைத்தார்.சிறப்பு அழைப்பாளராக பிரதேச செயலாளர் தமிச்செல்வன் வாலிபர் சங்த்தின் லட்சியங்களைபற்றி பேசினார்.மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,துனைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.இவ்விழாவில் கிளை செயலாளர் லாமார்க்,பொருளாளர் கார்த்திக்,பாலமுருகன்,மணிகண்டன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்றனர். சேகுவேரா பெயரில் துவங்கப்பட்டுள்ள இளைஞர் நற்பணி மன்றம் டிஒய்எப்ஜ யுடன் இனைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்திசெட்பேட்டையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு டிஒய்எப்ஜ நகர தலைவர் சரவணன் பரிசுகளை வழங்கினார்.சிஜடியு உடல் உழைப்போர் சங்கத்தின் பொருளாளர் குமார்,வாலிபர் சங்க நிர்வாகி வினோத்,சங்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment