Tuesday, August 2, 2011

பகத்சிங் இளைஞர் நற்பணி இயக்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா ரெட்டியார் பாளையத்தில் நடைபெற்றது



புதுச்சேரி ஜூலை 17
பகத்சிங் இளைஞர் நற்பணி இயக்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா ரெட்டியார் பாளையத்தில் நடைபெற்றது.
அஜிஸ் நகரில் நடந்த இவ்விழாவிற்கு கிளைத்தலைவர் அருண்ராஜ் தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு வாலிபர் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.வாலிபர் சங்கத்தோடு இணைந்துள்ள இயக்கத்தின் புதிய பெயர் பலகையை டிஒய்எப்ஜ புதுச்சேரி பிரதேச செயலாளர் டி.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து பேசினார்.மாதர் சங்க பிரதேச செயலாளர் சத்திய,டிஒய்எப்ஜ பிரதேச பொருளாளர் என்.பிரபுராஜ்,உழவர்கரை கமிட்டி செயலாளர் பாஸ்கர்,நகரகமிட்டி தலைவர் சரவணன்,எஸ்எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து, ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கிளை செயலாளர் ரமேஷ்,பொருளாளர் வேணு ,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் விழாவில் பங்கேற்றனர்.


கும்பகோனத்து தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 7ஆம் ஆண்டு தினத்தையொட்டி புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்வி வியாபார எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு இலாஸ்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித்,ஜெயராஜ் உள்ளிட்ட மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment