Thursday, August 18, 2011
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று
புதுச்சேரி ஆக 10
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று புதுச்சேரியில் மாணவர்கள் மேலதாலத்துடன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
புதுச்சேரி வ.ஊ.சி அரசு பள்ளி எதிரே நடந்த இந்த நிகழ்சியில் இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,துணைத்தலைவர் ரஞ்சித்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சந்துரு, மற்றும் நகரகமிட்டி தலைவர் சரவணன்,உழவர்கரை கமிட்டி செயலாளர் பாஸ்கர், சிஜடியு ஆட்டோ சங்க நிர்வாகி மது,நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகி பாலாஜி உள்ளிட்ட திரளான மாணவர்கள் உச்சநீதி மன்றத்தீர்ப்பை வரவேற்று மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். முன்னதாக மேலதாலத்துடன் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.
இதேப்போல் இலாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்,உள்ளிட்ட புதுச்சேரி முழுவதும் உள்ள கல்லுரிகளிலும்,கல்வி நிலையங்களிலும் மாணவர்சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment