Sunday, December 9, 2012

வாலிபர் சங்க நடைபயணம் எழுச்சியுடன் துவங்கியது


கொல்லங்கோடு, டிச. 1-மகாத்மா காந்தி தலைமை யிலான அன்றைய காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முழக்கமிட்டு சமர்புரிந் தது; சோனியா காந்தி தலை மையிலான இன்றைய காங் கிரஸ் ‘வெள்ளையனே உள் ளே வா’ என்று சிவப்புக்கம் பளம் விரித்து வரவேற்கிறது என்று பாலபிரஜாபதி அடிக ளார் சாடினார். எங்கள் மக்கள் உழைப் பாளிகள்; அமெரிக்காவுக்கு இந்திய நாட்டை அடமானம் வைப்பதை ஒருபோதும் அவர் கள் ஏற்கமாட்டார்கள்; வால் மார்ட் கொள்ளையர்களை ஒரு போதும் அனுமதிக்கமாட்டார் கள் என்றும் அவர் முழக்க மிட்டார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து நடைபெறும் நடை பயண பேரி யக்கத்தை துவக்கி வைத்து பேசுகையிலேயே மேற்கண்ட வாறு அவர் குறிப்பிட்டார். “நம் வாழ்வும் நாடும் விற் பனைக்கல்ல” என்ற முழக் கத்தோடு தமிழகத்தின் 8 மையங்களிலிருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நீண்ட நடைபயண பேரியக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்துகிறது. முதலா வது குழுவின் பயணம் குமரி மாவட்டம் கொல்லங்கோட் டில் சனிக்கிழமை துவங்கியது.
வாலிபர் சங்கத்தின் மாநி லத் தலைவர் செ.முத்துக் கண்ணன் தலைமையிலான இக்குழுவின் நடைபயணத் தை துவக்கி வைத்து, வெண் கொடியை எடுத்துக்கொடுத்து உரையாற்றிய பாலபிரஜாபதி அடிகளார், “ரத்தம் சிவப்பு நிறம். ரத்தம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் என் னைப்பொறுத்தவரை உழைப் பாளிகளின் ரத்தமே உயர்ந்த ரத்தம்; அவர்களது உழைப் பைச் சுரண்டி உட்கார்ந்து சாப்பிடுவோர் ரத்தம் தாழ்ந்த ரத்தம்” என்று குறிப்பிட்டார். எந்த மதமும் சாதியையோ, வன்முறையையோ வலியுறுத்த வில்லை. ஏற்றத்தாழ்வை அங் கீகரிக்கவில்லை. ஆனால் மதத்தின் பெயரால் இங்கு அரசியல் நடத்தப்படுகிறது எனக்குறிப்பிட்ட அவர், இன் றைக்கு கோயில்களும் மடங் களும் மதவாதிகளின் கைகளி லும் சாமியார்களின் கைகளி லும் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. இவற்றுக் குள்ளும் புகுந்து சுத்தப்படுத் தும் பணியை வாலிபர்கள் மேற் கொள்ள வேண்டுமென்றும் கூறினார். நாடு முழுவதுமுள்ள சபிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை கைகளில் ஏந்தி தேசம் காக்க நெடும்பய ணம் புறப்பட்டுள்ள வாலிபர் சங்கத்தின் போராட்டம் இன் னும் மகத்தானது என்று குறிப் பிட்ட அவர், ஏழைகளுக்காக நீதிகேட்டு சாதி கடந்து போராட வேண்டுமென்றும், சாதி என் பது ஒரு பேய் என்றும் சாடினார்.மக்கள் கோரிக்கைகளுக் காக தமிழக இளைஞர்களின் நடைபயணம் துவங்கியுள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதி யான கொல்லங்கோடு மகத் தான போராட்ட பூமி என்று குறிப்பிட்ட அவர், இந்தக்கோட் டில் துவங்கிய எந்த இயக்க மும் தோற்றதாக சரித்திரமில் லை என்று குறிப்பிட்டார். திரு வாங்கூர் மன்னனை எதிர்த்து, அவனது அதிகாரத்தையும் படைபலத்தையும் எதிர்த்து மக்கள் பலத்தோடு வைகுந்தர் போராடியதை நினைவு கூர்ந்தார். நடைபயண துவக்க நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். முருகேசன், கொல்லங்கோடு வட்டாரச் செயலாளர் விஜயமோகனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பயணக்குழுவில் சங்கத் தின் மாநிலச் செயற்குழு உறுப் பினர் பாலசுப்ரமணியன், மாவட்ட தலைவர் புஷ்பதாஸ், செயலாளர் சசி, பொருளாளர் எபிலைசியஸ் ஜோயல், இணைச் செயலாளர் ரெஜீஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற் றனர்.நடைபயணம் அங்கிருந்து புறப்பட்டு நித்திரவிளை, புதுக் கடை வழியாக மதியம் வெட்டு வெந்நியை அடைந்தது. மாலை யில் அங்கிருந்து குழித்துறை, பாகோடு, மேல்புறம் வழியாக அருமனையை அடைந்தது. பயணக்குழு சென்ற இடங்க ளில் சிபிஎம், சிஐடியு, விவசா யிகள் சங்கம், கட்டுமானத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள் ளிட்ட பல்வேறு வெகுஜன இயக்கங்களின் சார்பில் வர வேற்பு அளிக்கப்பட்டது.மாலையில் அருமனை யில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் மாநில தலைவர் முத் துக்கண்ணன் மற்றும் மாவட் டத் தலைவர்கள் பேசினர்.நடைபயண இயக்கம் ஞாயிறன்று காலை அருமனை யிலிருந்து புறப்பட்டு குலசேக ரம், திருவட்டார், ஆற்றூர் வழி யாக மதியம் சுவாமியார் மடத் தை அடைகிறது. மாலையில் அங்கிருந்து இரவிபுதூர்கடை, நட்டாலம் வழியாக கருங்கலில் நிறைவடைகிறது. அங்கு பொதுக் கூட்டம் நடைபெறு கிறது.





No comments:

Post a Comment