வாலிபர் சங்க உறுப்பினரை தாக்கிய சமூக விரோதியை கைது செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கரிகலாம்பாக்கத்தில் வாலிபர் சங்க நடைபயணத்தை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரபு(எ)மணிகண்டன்,வினோத் ஆகிய இருவாலிபர்களை கூர்மையான ஆயூதங்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இத்தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்தும்.உடணடியாக வழக்குபதிவு செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரிகலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டிஒய்எப்ஜ கிளை செயலாளர் சேகுவேராதாஸ் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன்,மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ்,பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் இரா.சரவணன்,துணை தலைவர் தட்சணாமூர்த்தி,சிபிஎம் இடைகமிட்டி செயலாளர் டி.முருகையன்,மற்றும் கொம்யூன் தலைவர் சண்முகம்,செயலாளர் கதிரவன்,இந்திய மாணவர் சங்க பிரதேசசெயலாளர் ஆனந்து,வி.தொ.ச நிர்வாகி ரத்திணவேலு உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment