பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த டில்லி மாணவிக்கு புதுச்சேரியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
டில்லியில் ஓடும் பேரூந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி உயிரிழந்ததையொட்டி அவரக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் சார்பில் கருப்பு சின்னம் அணிந்து மெழகு வத்தியுடன் ஊர்வலமாக சென்று மவுண அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி பெரியார் சிலை எதிரே துவங்கிய அமைதி ஊர்வலத்திற்கு மாதர் சங்க துணை தலைவர் வி.சுமதி தலைமை தாங்கினார்.சங்கத்தின் பிரதேச தலைவர் தெய்வானை,செயலாளர் மாரிமுத்து, வாலிபர் சங்க தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் ஆர்.சரவணன்,மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,துணைதலைவர் ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான மாதர்கள்,வாலிபர்,மாணவர்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பெரியார் சிலையிலிருந்து துவங்கிய ஊர்வலம் நேருவீதியை கடந்து கடற்கரை அருகில் அமைந்துள்ள பாரதியார் சிலை முன்பு முடிந்தது.பின்னர் அங்கு ஒரு நிமிடம் இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment