Thursday, October 28, 2010
சட்டமன்ற முற்றுகைபோராட்டம்
புதுச்சேரி அக் 27
புதுச்சேரி அரசு அறிவித்த வேலையில்லா காலநிவாரணத் தொகையை உடனே வழங்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி சட்டமன்றம் முன்பு முற்றுகைபோராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் உடனே நிரப்ப வேண்டும்.சமூககுற்றங்களை தடுக்க புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகளில் உள்ளுர் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிகாய்ச்சலை தடுக்க ஆரம்பசுகாதாரநிலையங்களில் நோய் தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்ட்ம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் முன்பு நடந்த முற்றுகைக்கு வாலிபர் சங்க பிரதேச தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் பிரபுராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மத்திய கமிட்டி உறுப்பினர் எ°.ஜி.ரமேஷ்பாபு போராட்டத்தை வாழ்த்தி பேசினார். முன்னதாக ஊர்வலத்தை துவக்கி வைத்து சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பேசினார். வாலிபர் சங்க நிர்வாகிகள் ரா.சரவணன், பா.சரவணன், தட்சணாமூர்த்தி, அரிதா°, கதிரவன், வெங்கடேசன், உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்று சட்டமன்ற எதிரே முற்றுகையிட்டு போராட்டடம் நடத்தினர்.
காவல் துறையினர் கேட்டு கொண்டதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக பழைய போருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அக் 27
அரக்கனூர் கிளை - பாகூர்
புதுச்சேரி அக் 14
பாகூர் அரங்கனூரில் பேருந்து நிழற்குடை அமைக்கபடாததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நுhதன முறையில் நவீன நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி அடுத்து பாகூர் கொம்யூன் அரங்கனூரில் நீண்ட காலமாக அமைக்கபடாத பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.புதியதாக அமைக்கப்பட்ட ஜமா° விளக்கு எரியவேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையம்,கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். என்பன கோரிக்கைகளை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்நூதன திறப்பு விழா போராட்டத்திற்கு சந்திரசேகர் தலைமைதாங்கினார். கீற்றால் அமைக்கப்பட்ட நவீன பயணிகள் நிழற்குடையை டிஓய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் திறந்து வைத்து பேசினார். ஜ மா°விலக்கை (தி பந்தத்தை) கொம்யூன் தலைவர் அரிதா° ஏற்றிவைத்தார். பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன், பொருளாளர் வீரப்பன், வில்லியனூர் கொம்யூன் செயலாளர் சண்முகம். விவசாய சங்க நிர்வாகி ரத்திணவேல் மற்றும் கிளை உறுப்பினர்கள் வெங்கடேசன், கனகராஜ்ஆனந்து, வினோத், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாலிபர் சங்கம் சார்பில் நடந்த இந்நூதன பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் ஊர்மக்கள் திரளாக பங்கேற்று உற்ச்சாகமாக கண்டுகளித்தனர்.
Friday, October 8, 2010
கரிக்கலாம்பக்கத்தில் தெருமுனைக்கூட்டம்
புதுச்சேரி அக் 4
ஒய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தும் என்று டிஓய்எப்ஐ தமிழ் மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார்.
இந்திய ஜனநாயக வாலிவர் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டு கோரிக்கை விளக்க தெருமுனைக்கூட்டம் கரிக்கலாம்பக்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பச்சையப்பன் தலைமைதாங்கினார் சேகுவேராதா° முன்னிலை வகித்தார். டிஓய்எப்ஐ தமிழ் மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்.
55 கோடி இளைஞர்கள் உள்ள இந்தியாவில் இளைஞர் நல கொள்கையை உருவாக்காத அரசு தான் மத்திய, மாநில காங்கிர° அரசு. டெல்லியில் உள்ள நேரு விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு ரூ 42 கோடி மட்டுமே செலவு பிடித்தது. தற்போது காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்காக அவ்விளையாட்டு மைதானம் 921 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது என்றால் மத்திய மன்மோகன்சிங் அரசு மக்கள் வரி பணத்ஐ எப்படி எல்லாம் பங்கு போட்டு கொல்லாம் என்பதில் தான் கவனமாக உள்ளனர்.
தமிழகத்தில் 48 லட்சம் பேரும் புதுச்சேரியில் 2.2 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்து கொண்டு இருக்கையில் இவர்களுக்கென்று எந்த வித வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவில்லை .சமிபத்தில் 60 வயது கடந்த ஒய்வு பெற்றவர்களை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் பணியில் சேர்த்து உள்ளது.இன்றைக்கு ஆட்சியாளர்களின் கொள்கையால் வேலையற்ற இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. எனவே ஜிப்மர் நிர்வாகத்தின் இச்செயலை கண்டித்து வாலிபர்சங்கம் போராட்டம் நடத்தும் என்று எச்சரித்தார்.
முன்னதாக சங்கத்தின் பிரதேச செயலாளர் த.தமிழ்செல்வன், பொருளாளர் என்.பிரபுராஜ், கொம்யூன் செயலாளர் எ°.சண்முகம், பத்மநாபன் ஆகியோர் பேசினார்கள்.
இக்கூட்டத்தில் பிரதேச நிர்வாகிகள் உள்ளிட்ட வாலிபர் சங்க உறுப்பினர்கள் திராளனோர் பங்கேற்றனர்.
படம் உள்ளது.
சட்டமன்றம் முன்பு ஆர்பாட்டம்
புதுச்சேரி அக் 7
கல்லுhரி வளர்ச்சியில் அக்கரை செலுத்தி வந்த மதர்தெரசா செவிலியர் கல்லுhரி டீனை மாற்றும் உத்தரவை திரும்பபெறக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுவை சட்டமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மதர்தெரசா அரசு செவிலியர் கல்லுhரியின் மாணவர்,ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியும்.பொறுப்பேற்று ஒன்பது மாதங்களில் கல்லுhரிக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி புதிய நுhல்களை வாங்கி நுhலகத்தை செயல்படுத்தி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகபடுத்தி கல்லுhரி வளர்ச்சி ஈடுபட்ட டீன் டாக்டர் கே.வி.ராமனின் பணிகாலம் முடிவதற்குல் உள்நோக்கத்தோடு இட மாற்றம் செய்ததை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,துனை செயலாளர் சரவணன்,நகர கமிட்டி தலைவர் சரவணன், செயலாளர் கதிரவன்,எ°எப்ஜ தலைவர் அரிகரன் ,நிர்வாகி ரஞ்சித்,அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகி கீதா ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள்.
முன்னதாக பழையபேருந்து நிலையத்தில் இருந்து செவிலியர் கல்லுhரி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று சட்டமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
படம் உள்ளது
Friday, October 1, 2010
பகத் சிங் - Bhagat Singh
பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 27, 1907 –மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுவதுண்டு
இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது
Subscribe to:
Posts (Atom)