Friday, October 8, 2010
சட்டமன்றம் முன்பு ஆர்பாட்டம்
புதுச்சேரி அக் 7
கல்லுhரி வளர்ச்சியில் அக்கரை செலுத்தி வந்த மதர்தெரசா செவிலியர் கல்லுhரி டீனை மாற்றும் உத்தரவை திரும்பபெறக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுவை சட்டமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மதர்தெரசா அரசு செவிலியர் கல்லுhரியின் மாணவர்,ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியும்.பொறுப்பேற்று ஒன்பது மாதங்களில் கல்லுhரிக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி புதிய நுhல்களை வாங்கி நுhலகத்தை செயல்படுத்தி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகபடுத்தி கல்லுhரி வளர்ச்சி ஈடுபட்ட டீன் டாக்டர் கே.வி.ராமனின் பணிகாலம் முடிவதற்குல் உள்நோக்கத்தோடு இட மாற்றம் செய்ததை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,துனை செயலாளர் சரவணன்,நகர கமிட்டி தலைவர் சரவணன், செயலாளர் கதிரவன்,எ°எப்ஜ தலைவர் அரிகரன் ,நிர்வாகி ரஞ்சித்,அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகி கீதா ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள்.
முன்னதாக பழையபேருந்து நிலையத்தில் இருந்து செவிலியர் கல்லுhரி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று சட்டமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
படம் உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment