Friday, October 8, 2010

கரிக்கலாம்பக்கத்தில் தெருமுனைக்கூட்டம்


புதுச்சேரி அக் 4
ஒய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தும் என்று டிஓய்எப்ஐ தமிழ் மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார்.
இந்திய ஜனநாயக வாலிவர் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டு கோரிக்கை விளக்க தெருமுனைக்கூட்டம் கரிக்கலாம்பக்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பச்சையப்பன் தலைமைதாங்கினார் சேகுவேராதா° முன்னிலை வகித்தார். டிஓய்எப்ஐ தமிழ் மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்.
55 கோடி இளைஞர்கள் உள்ள இந்தியாவில் இளைஞர் நல கொள்கையை உருவாக்காத அரசு தான் மத்திய, மாநில காங்கிர° அரசு. டெல்லியில் உள்ள நேரு விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு ரூ 42 கோடி மட்டுமே செலவு பிடித்தது. தற்போது காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்காக அவ்விளையாட்டு மைதானம் 921 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது என்றால் மத்திய மன்மோகன்சிங் அரசு மக்கள் வரி பணத்ஐ எப்படி எல்லாம் பங்கு போட்டு கொல்லாம் என்பதில் தான் கவனமாக உள்ளனர்.
தமிழகத்தில் 48 லட்சம் பேரும் புதுச்சேரியில் 2.2 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்து கொண்டு இருக்கையில் இவர்களுக்கென்று எந்த வித வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவில்லை .சமிபத்தில் 60 வயது கடந்த ஒய்வு பெற்றவர்களை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் பணியில் சேர்த்து உள்ளது.இன்றைக்கு ஆட்சியாளர்களின் கொள்கையால் வேலையற்ற இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. எனவே ஜிப்மர் நிர்வாகத்தின் இச்செயலை கண்டித்து வாலிபர்சங்கம் போராட்டம் நடத்தும் என்று எச்சரித்தார்.
முன்னதாக சங்கத்தின் பிரதேச செயலாளர் த.தமிழ்செல்வன், பொருளாளர் என்.பிரபுராஜ், கொம்யூன் செயலாளர் எ°.சண்முகம், பத்மநாபன் ஆகியோர் பேசினார்கள்.
இக்கூட்டத்தில் பிரதேச நிர்வாகிகள் உள்ளிட்ட வாலிபர் சங்க உறுப்பினர்கள் திராளனோர் பங்கேற்றனர்.
படம் உள்ளது.

No comments:

Post a Comment