Thursday, October 28, 2010

சட்டமன்ற முற்றுகைபோராட்டம்


புதுச்சேரி அக் 27

புதுச்சேரி அரசு அறிவித்த வேலையில்லா காலநிவாரணத் தொகையை உடனே வழங்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி சட்டமன்றம் முன்பு முற்றுகைபோராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் உடனே நிரப்ப வேண்டும்.சமூககுற்றங்களை தடுக்க புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகளில் உள்ளுர் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிகாய்ச்சலை தடுக்க ஆரம்பசுகாதாரநிலையங்களில் நோய் தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்ட்ம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் முன்பு நடந்த முற்றுகைக்கு வாலிபர் சங்க பிரதேச தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் பிரபுராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மத்திய கமிட்டி உறுப்பினர் எ°.ஜி.ரமேஷ்பாபு போராட்டத்தை வாழ்த்தி பேசினார். முன்னதாக ஊர்வலத்தை துவக்கி வைத்து சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பேசினார். வாலிபர் சங்க நிர்வாகிகள் ரா.சரவணன், பா.சரவணன், தட்சணாமூர்த்தி, அரிதா°, கதிரவன், வெங்கடேசன், உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்று சட்டமன்ற எதிரே முற்றுகையிட்டு போராட்டடம் நடத்தினர்.
காவல் துறையினர் கேட்டு கொண்டதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக பழைய போருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அக் 27

No comments:

Post a Comment