Thursday, October 28, 2010

அரக்கனூர் கிளை - பாகூர்


புதுச்சேரி அக் 14
பாகூர் அரங்கனூரில் பேருந்து நிழற்குடை அமைக்கபடாததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நுhதன முறையில் நவீன நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி அடுத்து பாகூர் கொம்யூன் அரங்கனூரில் நீண்ட காலமாக அமைக்கபடாத பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.புதியதாக அமைக்கப்பட்ட ஜமா° விளக்கு எரியவேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையம்,கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். என்பன கோரிக்கைகளை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்நூதன திறப்பு விழா போராட்டத்திற்கு சந்திரசேகர் தலைமைதாங்கினார். கீற்றால் அமைக்கப்பட்ட நவீன பயணிகள் நிழற்குடையை டிஓய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் திறந்து வைத்து பேசினார். ஜ மா°விலக்கை (தி பந்தத்தை) கொம்யூன் தலைவர் அரிதா° ஏற்றிவைத்தார். பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன், பொருளாளர் வீரப்பன், வில்லியனூர் கொம்யூன் செயலாளர் சண்முகம். விவசாய சங்க நிர்வாகி ரத்திணவேல் மற்றும் கிளை உறுப்பினர்கள் வெங்கடேசன், கனகராஜ்ஆனந்து, வினோத், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாலிபர் சங்கம் சார்பில் நடந்த இந்நூதன பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் ஊர்மக்கள் திரளாக பங்கேற்று உற்ச்சாகமாக கண்டுகளித்தனர்.

No comments:

Post a Comment