Sunday, March 3, 2013

நரிகுறவர் பெண்ணை தடியால் தாக்கிய புதுச்சேரி காவலர் மீது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.


புதுச்சேரி,மார்ச்-2

நரிகுறவர் பெண்ணை தடியால் தாக்கிய புதுச்சேரி காவலர் மீது   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.


புதுச்சேரி விமான நிலையம் பின்புறம் உள்ள குறவர் பேட்டையில் வசிப்பவர்
S.கார்த்திகா (வயது 22).புதுச்சேரி கடற்கரையில் தினமும் சிறுவர்களுக்கான
விளையாட்டு பொருட்கள் பலூன்,பந்து உள்ளிட்ட பொருட்களை விற்று வியாபாரம் செய்து வருகிறார்.கார்த்திகா தனது மூன்று குழந்தைகளுடன் கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே ஒரமாக அமர்ந்து உணவு அருந்தியுள்ளார்.அப்போது பெரிய கடைகாவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் இருவர் கார்த்திகா வை ஆபசமாக திட்டியதோடு தான் வைத்திருந்த தடியால் கார்த்திகாவின் பின்பக்க இடுப்பில்
ஓங்கி அடித்துள்ளார்.மீண்டும் அந்த காவலர் கார்த்திகாவை தடியால் ஓங்கி
அடிக்க முற்பட்ட போது அவரது கை மணிகட்டில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது.நடந்த இச்சம்பவத்தை கேள்வி பட்ட டிஒய்எப்ஐ புதுச்சேரி பிரதேச பொருளாளர் இரா.சரவணன்,உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் பாஸ்கர் மற்றும் கமிட்டி உறுப்பினர் அருள் ஆகியோர்   பாதிக்கப்பட்ட கார்த்திகாவை அரசு மருத்துமனையில் அனுமதித்தார்.பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பெரிய கடை காவல்நிலைய உதவி ஆய்வாளரை சந்தித்து சம்பந்த பட்ட காவலர் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கவும்,கடற்கரையில் நரிகுறவர்கள் வியாபரம் செய்ய பாதுகாப்பு வழங்கவும்   வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment