Saturday, March 9, 2013

இலாஸ்பேட்டை ஆரம்ப சுகாதரா நிலையதின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி,மார்ச்-6

இலாஸ்பேட்டை ஆரம்ப சுகாதரா நிலையதின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  உழவர்கரை நகர கமிட்டி மாநாடு கமிட்டி தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.சங்கத்தின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.சங்கத்தின் பிரதேச செயலாளர் பி.சரவணன் மாநாட்டை வாழ்த்தி பேசினார்.திரளான வாலிபர்கள் கலந்து கொண்ட மாநாட்டை பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன் நிறைவு செய்து பேசினார். 

இம்மாநாட்டில் கமிட்டியின் புதிய தலைவராக அன்துவான்,செயலாளராக முரளி,பொருளாளராக சுந்தர் உள்ளிட்ட 7பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

பொய்யாகுலம்,சாமிப்பிள்ளை தோட்டம் ஆகி ய பகுதிகளில் பொதுகழிப்பிடம் அமைக்க வேண்டும்.லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதரநிலையத்தில் கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி 24மணிநேரமும் செயல்படக்கூடிய சுகாதாரமையமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment