Thursday, March 28, 2013

புதுச்சேரி பஞ்சாலைகளை நவீனபடுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று வாலிபர் சங்க நகரகமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது.



புதுச்சேரி,மார்ச்-26
புதுச்சேரி பஞ்சாலைகளை நவீனபடுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று வாலிபர் சங்க நகரகமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது.


இந்தியஜனநாயக வாலிபர் சங்க 15வது நகரகமிட்டி மாநாடு முதலியார்பேட்டையில் நடைபெற்றது.இம்மாநாட்டை டிஒய்எப்ஐ பிரதேச இணைசெயலாளர் பாஸ்கர் துவக்கிவைத்து பேசினார்.பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன்,எல்ஐசி முகவர் சங்க கல்விக்குழு தலைவர் ஆர்.எம்.ராம்ஜி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.இறுதியாக மாநாட்டை சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பிரபுராஜ் முடித்து வைத்து பேசினார்.இம்மாநாட்டில் நகரகமிட்டியின் புதிய தலைவராக எச்.விஜி(எ)இராமசாமி,செயலாளராக கே.அழகப்பன்,துணை தலைவர்களாக நாகமுத்து,முருகன்,துணை செயலாளர்களாக பிரதாப், எஸ்.கவுசல்யா,பொருளாளராக வினோத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,முத்தியால்பேட்டை சோலைநகர் கசாப்புகாரன் தோப்பில் வசிக்கும் மக்களுக்கு இலவச மணைப்பட்ட வழங்கவேண்டும்.டி.பி தோட்டத்தில் சாலைவசதி ஏற்படுத்த வேண்டும்.வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதுச்சேரில் ஐடி பார்க் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment