Tuesday, March 19, 2013

PUDUCHERRY STUDENTS STRUGGLE AT INCOME TAX DEPARTMENT

புதுச்சேரி,மார்ச்-19

புதுச்சேரியில் மாணவர்கள் வருமாணவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இலங்கை இனவாத அரசின் போர்க்குற்றங்கள் குறித்து உயர்மட்ட நம்பகத்தன்மையுள்ள சுயோச்சையான விசாரணையை நடத்துவதற்கு இலங்கை அரசை ஒத்துக்கொள்ள வைக்க ஜநா மனித உரிமை ஆணையக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தவேண்டும்.தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்த்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி வருமாணவரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைபோராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச தலைவர் அரிகரன் தலைமைதாங்கினார்.பிரதேச செயலாளர் ஆனந்து,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன்,நகரகமிட்டி தலைவர் அழகப்பன்,டி.பி.கிளைத்தோட்ட செயலாளர் நாகமுத்து,பொறியியல் கல்லூரி மாணவர் பிரபாகரன் உள்ளிட்ட திரளான கல்லூரி மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் அண்ணாசாலை,நேருவீதி,காந்திவிதியை கடந்து வருமாணவரித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment